அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சாக்ஷி. இதையடுத்து ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்த சாக்ஷி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர்.