அடி ஆத்தி... அழகோ அழகு...! சாக்‌ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்டை பார்த்து புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்...!

First Published | Jan 18, 2021, 5:54 PM IST

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செம்ம ட்ரெடிஷ்னல் லுக்கில் சாக்‌ஷி அகர்வால் நடத்தியுள்ள போட்டோஸ் காண்போர் கண்களை கொள்ளையடிக்கிறது. 
 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்‌ஷிக்கு அட்ரஸ் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
தற்போது கைவசம் ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்கள் உள்ளன. அதுமட்டும் இல்லாமல் மாடலிங்கில் வேறு புகுந்து விளையாடி வருகிறார்.
Tap to resize

பட வாய்ப்புகள் அதிகரிக்க அதிகரிக்க சாக்‌ஷியின் போட்டோ ஷூட்களில் உடையின் அளவும் குறைந்து கொண்டே வந்தது. பாவாடை, தாவணி, புடவை, லெஹங்கா என ஆரம்பித்தவர் குட்டை டவுசரில் இருந்து பேண்ட் போடாமலும், பிகினி வரையிலும் போஸ் கொடுத்துவிட்டார்.
என்னைக்காவது ஒருநாள் புடவையில் போட்டோ ஷூட் நடத்தினாலும் இந்த கவர்ச்சி போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா? என்ற தோரணையில் தான் இருப்பதாக ரசிகர்களே கலாய்த்தனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு செம்ம ட்ரெடிஷ்னல் லுக்கில் சாக்‌ஷி அகர்வால் நடத்தியுள்ள போட்டோஸ் காண்போர் கண்களை கொள்ளையடிக்கிறது.
ஜிகு ஜிகு வேலைப்பாடுகள் கொண்ட ஃபுல் ஹேண்ட் டிசைனர் பிளவுஸ், மெல்லிய புடவையில் ஓவராக ஆர்ப்பாட்டம் இல்லாமல் போஸ் கொடுத்து இளசுகளின் மனதை அள்ளியிருக்கிறார் சாக்‌ஷி.
எந்த விதமான ஆடம்பர மேக்கப் அல்லது ஆபரணங்கள் இல்லாமலேயே அழகு தேவதையாய் ஜொலிக்கும் சாக்‌ஷி அகர்வாலை வர்ணிக்க வார்த்தையின்றி தவிக்கின்றனர் ரசிகர்கள்.
அழகுக்கு மிகவும் பொருத்தமான கலர் புடவையில் அம்சமாக போஸ் கொடுத்திருக்கும் சாக்‌ஷியின் போட்டோஸ் லைக்குகளை அள்ளுகிறது.
போதாக்குறைக்கு அடி ஆத்தி... இவ்வளவு இந்த அழகை எங்கே ஒளிச்சி வச்சியிருத்தீங்க என ரசிகர்களே கண் வைக்கும் அளவிற்கு கலக்கலாக இருப்பதாக கமெண்ட்களும் குவிகிறது.

Latest Videos

click me!