நடிகை ரோஜா திடீரென மருத்துவமனையில் அனுமதி... ரசிகர்களுக்கு ஆர்.கே.செல்வமணி சொன்ன அதிர்ச்சி செய்தி!

First Published | Mar 30, 2021, 12:16 PM IST

நடிகை ரோஜா உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள பிரபல  தனியார் மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக செம்பருத்தி படத்தில் அறிமுகமானவர் ரோஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார்.
இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதல் திருமணம் செய்து கொண்ட ரோஜாவிற்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய ரோஜா, அரசியலிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்.
Tap to resize

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் ரோஜா, ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ரோஜா உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள நடிகை ரோஜாவின் கணவர் ஆர்.கே.செல்வமணி "இப்போது ரோஜா நன்றாக இருக்கிறார்.அவருக்கு இரண்டு பெரிய அறுவை சிகிச்சைகள் செய்து, அவர் குணமடைந்து வருகிறார்.இதுவரை பல முறை தள்ளிப் போட்டிருக்கிறார்" . இதையடுத்து ரசிகர்கள் ரோஜா விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Latest Videos

click me!