அரை நிர்வாணமா நடிச்சதுக்கே திட்றாங்க.. இனி நிர்வாணமா நடிக்கவும் தயாரா இருக்கேன் - இரவின் நிழல் பட நடிகை தடாலடி

Published : Jul 19, 2022, 11:21 AM ISTUpdated : Jul 19, 2022, 01:29 PM IST

இரவின் நிழல் படத்தில் ஒரு சீனில் மட்டும் அரை நிர்வாணமாக நடித்ததற்காக பாராட்டுக்கள் கிடைத்தாலும், ஏராளமான நெகடிவ் விமர்சனங்களும் வருவதாக நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

PREV
16
அரை நிர்வாணமா நடிச்சதுக்கே திட்றாங்க.. இனி நிர்வாணமா நடிக்கவும் தயாரா இருக்கேன் - இரவின் நிழல் பட நடிகை தடாலடி

பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் இரவின் நிழல். இப்படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். உலகளவில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட முதன் நான் லீனியர் படமாக இது உருவாகி இருக்கிறது. இப்படத்தில் நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், ரேகா நாயர், ரோபோ சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

26

திரையரங்குகளில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இதனால் நடிகர் பார்த்திபன் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். புதிய பாதைக்கு பின் இப்படம் தனக்கு மிகுந்த சந்தோஷத்தை தந்ததாக பார்த்திபன் சமீபத்திய பேட்டியில் கூறி இருந்தார்.

36

இரவின் நிழல் படத்தில் சில நடிகைகள் நிர்வாணமாக நடித்துள்ள காட்சிகளும் உள்ளன. அதில் ஒன்று நாயகி பிரிகிடா, அவர் ஏன் இவ்வாறு நடிக்க சம்மதித்தார் என்பதை சமீபத்திய பேட்டியில் கூறி இருந்தார். மற்றொருவர் ரேகா நாயர். இவர் இப்படத்தில் ஒரு காட்சியில் மட்டும் அரை நிர்வாணமாக நடித்து இருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டிகளும் கிடைத்தன.

இதையும் படியுங்கள்... இரவின் நிழல் படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தது ஏன்?... மனம் திறந்த ‘பவி டீச்சர்’ பிரிகிடா

46

அதைப்பற்றி நடிகை ரேகா நாயர் பேட்டி ஒன்றில் கூறியதாவது : “கலையை கலையாக பார்க்க வேண்டும். நான் இப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்ததனால் எனக்கு எந்த அளவு பாராட்டுக்கள் கிடைத்ததோ, அதே அளவு நெகடிவ் விமர்சனங்களும் வருகிறது. பணம் கொடுத்தா என்ன வேணும்னாலும் பண்ணுவியானுலாம் திட்றாங்க.

56

எனக்கு படங்களில் ஹீரோயினா நடிக்கனும்னுலாம் விருப்பமில்லை, ஒரு பிச்சைக்காரியாகவோ, விபச்சாரியாகவோ தயங்காமல் நடிப்பேன். நல்ல கதையாக இருந்தால், கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாகவும் நடிக்க தயாராக இருக்கிறேன். இப்படி நடிச்சா தான் இப்பல்லாம் கொண்டாடுறாங்க என நடிகை ரேகா நாயர் கூறி உள்ளார்.

click me!

Recommended Stories