விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் மிகவும் பேமஸ் ஆனது அது இது எது எனும் நிகழ்ச்சி தான். அந்நிகழ்ச்சி மிகவும் பிரபலம் அடைய முக்கிய காரணம் இருவர் தான். ஒன்று சிவகார்த்திகேயன், மற்றொன்று வடிவேல் பாலாஜி. சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக அந்நிகழ்ச்சியில் கலக்க, மறுபுறம் அதில் வரும் சிரிச்சா போச்சு சுற்றில் பல வேடங்களில் வந்து பலரை மனதார சிரிக்க வைப்பார் வடிவேல் பாலாஜி.