தமிழ் இயக்குனர்களுக்கு பிற மொழிகளில் செம்ம டிமாண்ட் உருவாகி உள்ளது. அந்த வகையில் ஷங்கர், லிங்குசாமி, வெங்கட் பிரபு போன்ற இயக்குனர்கள் தற்போது தெலுங்கு படங்களை இயக்க சென்றுவிட்டனர். தெலுங்கை தொடர்ந்து தற்போது இந்தியிலும் கோலிவுட் இயக்குனர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. தற்போது அங்கு அட்லீ இயக்கி வரும் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
அவர் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஷாருக்கிற்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் படு ஜோராக நடைபெற்று வருகிறது. ஜவான் படத்தை வருகிற 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ந் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்... ஓடிடி-யில் நேரடியாக வெளியாகும் சிபிராஜின் 'வட்டம்'!
இதுதவிர இயக்குனர் ஷங்கரும், ஹிந்தி படம் ஒன்றை இயக்க கமிட் ஆகி உள்ளார். அவர் இயக்கத்தில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்க உள்ளார்.