3 வருடங்களாகத் தொல்லை தரும் டுவின்ஸ்... போலீசில் புகார் அளித்தும் பயனில்லை : லவ் டுடே பட நடிகை ஆதங்கம்

Published : Feb 06, 2026, 01:18 PM IST

லவ் டுடே பட நடிகை ரவீனா, தனக்கு சமூக வலைதளத்தில் வெறுக்கத்தக்க மொழியில் மெசேஜ்களும் கமெண்ட்களும் வருவதாகக் கூறி அனைத்து ஸ்கிரீன் ஷாட்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

PREV
15
Raveena Ravi Cyber Harassment

சமூக ஊடகங்கள் மூலம் கடந்த சில ஆண்டுகளாக தங்களைத் துன்புறுத்துபவர்களின் புகைப்படம் மற்றும் விவரங்களை வெளியிட்டுள்ளார் டப்பிங் கலைஞரும், நடிகையுமான ரவீனா. இவர் பிரபல டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா ரவியின் மகள். சபரீஷ் என்ற நபரும் அவரது இரட்டை சகோதரரும்தான் தன்னையும், தன் குடும்பத்தையும், நண்பர்களையும் தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், காவல்துறையில் பலமுறை புகார் அளித்தும் இது தொடர்வதாகவும் அவர் கூறி உள்ளார்.

25
ஆதங்கத்தை கொட்டிய ரவீனா

வெறுக்கத்தக்க மொழியில் மெசேஜ்களும் கமெண்ட்களும் வருவதாகக் கூறிய அவர், அனைத்து ஸ்கிரீன் ஷாட்களையும் பகிர்ந்துள்ளார். மேலும் பல பெண் நடிகைகளுக்கும் இவர்களால் இதே போன்ற மோசமான அனுபவம் ஏற்பட்டுள்ளதாகவும் ரவீனா குறிப்பிட்டுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக எங்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வரும் இந்த நபர்களிடமிருந்து என் குடும்பத்தையும், நண்பர்களையும், என்னையும் பாதுகாக்கவே இந்தப் பதிவை இடுகிறேன்.

35
நண்பர்களையும் துன்புறுத்துகிறார்கள்

காவல்துறையில் அளித்த புகார்களும், எச்சரிக்கைகளும் இதைத் தடுக்கும் என்று நம்பினேன். அதனால்தான் இவ்வளவு காலம் அமைதியாக இருந்தேன். ஆனால், சபரீஷ் என்ற நபரும் அவரது இரட்டை சகோதரரும் என்னையும், என் குடும்பத்தையும், என் நண்பர்களையும் தொடர்ந்து துன்புறுத்துகின்றனர். வெறுக்கத்தக்க மொழியில் கமெண்ட்களையும் மெசேஜ்களையும் அவர்கள் அனுப்புகிறார்கள். என்னை மட்டுமல்ல, எனக்கு நெருக்கமானவர்களையும் அவர்கள் குறிவைக்கிறார்கள்.

45
சட்டப்படி நடவடிக்கை எடுத்தும் பலனில்லை

என்னால் இந்தத் துன்பத்தை அனுபவிக்க நேர்ந்த என் நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுத்தும், இது முடிவுக்கு வரவில்லை. வெவ்வேறு கணக்குகளிலிருந்து அவர்களின் மோசமான மெசேஜ்களும் கமெண்ட்களும் வருகின்றன. என்னை மட்டுமல்ல, பல பெண் நடிகைகளுக்கும் இந்த மோசமான அனுபவம் உள்ளது. இதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.

55
ரவீனா வேண்டுகோள்

நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்வது: அவர்களது சுயவிவரத்தை பிளாக் செய்து ரிப்போர்ட் செய்யுங்கள். அவரிடமிருந்தோ அல்லது அவரது சகோதரரிடமிருந்தோ ஏதேனும் மெஜேஜ் வந்தால் எச்சரிக்கையாக இருங்கள். அவர்களின் கமெண்ட்களுக்கோ மெசேஜ்களுக்கோ பதிலளிக்க வேண்டாம். இந்தியாவில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரம் சென்னை என்று கூறப்படுகிறது. அதை நிரூபிக்கும் வகையில், இதுபோன்ற நபர்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன் என ரவீனா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories