பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்திலிடம் அனைத்து உண்மைகளையும் கோமதி சொன்னதை அடுத்து மீனாவிடம் சென்று பேசுகிறார் செந்தில். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிரும், ராஜியும் சென்னைக்கு சென்று ஜாலியாக ரொமான்ஸ் செய்துகொண்டிருக்கிறார்கள். வீட்டில் பாண்டியன் தன் மீது கோபத்தில் இருப்பதால் அவரை சமாதானப்படுத்த கோமதி படாதபாடு படுகிறார். அவருக்காக லெட்டர் ஒன்றையும் எழுதிக் கொண்டுபோய் கொடுத்துப் பார்த்தார். அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. அதன்பின்னர் சோகத்துடன் வீட்டுக்கு வந்த கோமதி, மீனாவை முதலில் திட்டுகிறார். பின்னர் ராஜியின் ஸ்டேட்டஸை பார்த்து அவரையும் போன் போட்டு திட்டி இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
கதிரை உரசும் ராஜி
சென்னையில் உள்ள கதிர், ராஜி இருவரும் ஜோடியாக ரோட்டில் பேசிக்கொண்டே வருகிறார்கள். அப்போது கதிரை சீண்டும் ராஜி, அவரை வேண்டுமென்றே உரசுகிறார். இதை நோட் பண்ணும் கதிர், ரூமுக்கு வா உன்னை கவனிச்சிக்குறேன் என சொல்கிறார். உடனே ராஜி, ரூமுக்கு வந்தா மட்டும் நீ என்ன செஞ்சிற போற என கிண்டல் பண்ணுகிறார். பின்னர் இருவரும் ரூமுக்கு சென்றதும், ராஜியை இழுத்து பிடிக்கும் கதிர், ராஜியை கட்டிப்பிடிக்கிறார்.
35
காதலை கொட்டும் கதிர்
அதன்பின்னர் இருவரும் பெட்டில் அமர்ந்து ரொமான்ஸ் பண்ண ஸ்டார்ட் பண்ணுகிறார்கள். உன்னை கல்யாணம் பண்ணும்போது பிடிக்காம தான் கல்யாணம் பண்ணுனேன். ஆனால் இப்போ இந்த உலகத்துலேயே உனக்கு ரொம்ப புடிச்சது யாருனு கேட்டா, உன்னை தான் சொல்வேன் என கதிர் சொல்ல, ராஜி, கதிர் மேல் சாய்கிறார்.
மறுபுறம் செந்தில் வீட்டுக்கு வந்து கோமதியிடம் பேசுகிறார். அப்போது கோமதி, திருச்செந்தூரில் என்ன நடந்தது என்பதை சொல்கிறார். மீனா மேல ஒரு தப்புமே இல்ல, மீனா தான் மாமாவுக்கு தெரியாம இந்த கல்யாணத்தை பண்ணக் கூடாதுனு சண்டை போட்டா, ஆனா நான் தான் துணிந்து கல்யாணம் பண்ணிவச்சு, யாருகிட்டயும் சொல்லக் கூடாதுனு மீனா கிட்ட சத்தியம் வாங்கிட்டேன். இதுனால மீனாவுக்கு தான் கெட்ட பேரு வந்திருக்கு. அவளுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை என கோமதி சொன்ன பிறகு தான் செந்திலும் என்ன நடந்தது என்றே புரிய வருகின்றது.
55
மீனாவிடம் பேசும் செந்தில்
அதன்பின்னர் நேராக வீட்டுக்கு செல்லும் செந்தில், மீனாவிடம் நான் எதுவுமே உன்னை தப்பா நினைக்கவில்லை. உன்னை நான் மன்னிச்சுட்டேன் என சொல்கிறார். ஆனால் மீனா அதையெல்லாம் காதுகொடுத்து கேட்கவே இல்லை. இதன்பின்னர் என்ன ஆனது? மீனா செந்திலை மன்னித்து அவருடன் மீண்டும் சேர்ந்தாரா? கோமதி கொடுத்த லெட்டரை எடுத்து வைத்திருக்கும் பாண்டியன், அதை படித்து பார்த்த பின்னர் கோமதியுடன் பேசினாரா? சென்னையில் ரொமான்ஸ் பண்ணும் கதிர் - ராஜி ஜோடி பத்திரமாக ஊருக்கு திரும்பினார்களா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.