தன்னுடைய முதல் படமான 'ஜோக்கர்' படத்தில் சில காட்சிகளில் வந்தாலும், வித்தியாசமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரம்யா பாண்டியன்.
210
இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்த ஆண் தேவதை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தும், படம் தோல்வியை தழுவியதால் பட வாய்ப்புகள் குறைய துவங்கியது.
310
இதனால் தன்னுடைய சமூக வலைதளத்தில் மெல்லிய சேலையில்... தன்னுடைய இடுப்பழகை காட்டி இவர் வெளியிட்ட புகைப்படம், ஒரே நாளில் இவரை படு ஃபேமஸ்சாக ஆகியது மட்டும் இன்றி இளம் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வர வைத்தது.
410
பின்னர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் சாமர்த்தியமாக விளையாடி... 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்தார். அந்நிகழ்ச்சியில் 4-வது இடத்தை பிடித்து அசத்தினார்.
510
கண்டமேனிக்கு படங்களை தேர்வு செய்து நடிப்பதை விட, வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்தாலும்... அது ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும் கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் ரம்யா பாண்டியன்.
610
குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், இவர் தேர்வு செய்யும் கதைகளும் மிகவும் வித்தியாசமாகவே உள்ளது. அந்த வகையில்... சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியான 'ராமே ஆண்டாளும் ராவன ஆண்டாளும்' படத்தில் இவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
710
இதை தொடர்ந்து தற்போது தமிழில், 'இடும்பன்காரி' என்கிற படத்திலும், மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் மாமூட்டி நடித்து வரும் 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்கிற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
810
மேலும் தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக... விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியன் தற்போது சேலையில் இடுப்பழகை காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
910
கருப்பு நிற சேலையில்... தாராள கவர்ச்சியில் மீண்டும் மொட்டை மாடியில் நின்றபடி இவர் எடுத்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
1010
எவ்வளவு கவர்ச்சி உடை அணிந்தாலும், சேலையில் போஸ் கொடுத்தாலும்... எப்போதுமே ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் எடுக்கும் போட்டோ ஷூட்டுகளுக்கு வேற லெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.