samantha Item song : ஐட்டம் சாங்கிற்கு ஆட்டம் போட அழைக்கும் பாலிவுட் ஸ்டார்! சமந்தா, ஊ சொல்வாரா.. ஊஊ சொல்வாரா?

Ganesh A   | Asianet News
Published : Jan 20, 2022, 06:17 AM IST

புஷ்பா பட பாடலுக்கு நடனமாட முதலில் சமந்தா மறுத்ததாகவும், அதன் பின்னர் நடிகர் அல்லு அர்ஜுன் அவரை சமாதானப்படுத்தியதோடு, சம்பளத்தையும் அதிகமாக தருவதாக கூறி ஆட வைத்தாராம். 

PREV
15
samantha Item song : ஐட்டம் சாங்கிற்கு ஆட்டம் போட அழைக்கும் பாலிவுட் ஸ்டார்! சமந்தா, ஊ சொல்வாரா.. ஊஊ சொல்வாரா?

நடிகை சமந்தா (Samantha), தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த பின்னர் அவரது கேரியர் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. திருமண வாழ்க்கையில் சமந்தா கடந்த ஆண்டு தோல்வியை சந்தித்தாலும், திரை துறையில் யாராலும் ஒளித்துவைக்க முடியாத வைரம் போல் ஜொலித்தார். 

25

தெலுங்கு, தமிழ், இந்தி, என தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க கூடிய சிறந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா, அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். 

35

இதுதவிர அல்லு அர்ஜுன் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெறும் ஐட்டம் சாங்கில் உச்சகட்ட கவர்ச்சியில் அவர் ஆடிய நடனம் திரையுலகினரை மட்டுமல்லாது ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சமந்தா ஆடிய ஐட்டம் பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இப்பாடலுக்காக படத்தை பார்த்தவர்கள் ஏராளம்.

45

படத்தில் 3 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த பாடலுக்கு நடனமாட முதலில் சமந்தா மறுத்ததாகவும், அதன் பின்னர் நடிகர் அல்லு அர்ஜுன் அவரை சமாதானப்படுத்தியதோடு, சம்பளத்தையும் அதிகமாக தருவதாக கூறி ஆட வைத்தாராம். அதன்படி இப்பாடலில் கவர்ச்சி நடனம் ஆட நடிகை சமந்தா ரூ.5 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.

55

இந்நிலையில், பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் படத்தில் இடம்பெறும் ஐட்டம் சாங்கிற்கு நடனமாட சமந்தாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புஷ்பா படத்தில் சமந்தாவின் நடனம் ஷாருக்கானை மிகவும் கவர்ந்ததால், அவர் தன் படத்திலும் சமந்தாவை ஆட வைக்க முனைப்பு காட்டி வருகிறாராம். ஆனால் இதற்கு சமந்தா ஓகே சொல்வாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories