Dhanush Divorce : ஓ.. உனக்கு அந்த ஆசை வேற இருந்துச்சா!! இனி வாய்ப்பில்ல ராஜா - தனுஷை வச்சு செய்யும் ரஜினி fans

First Published | Jan 20, 2022, 5:35 AM IST

கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ், அவ்வப்போது படம் இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

நடிகர் தனுஷுக்கும், ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணமானது. இத்தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் அறிக்கை வெளியிட்டு விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். 

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இந்த எதிர்பாரா அறிவிப்பு சமூக வலைதளங்களை அதிர வைத்தது. ரசிகர்கள் அனைவரும் ஏன் இந்த முடிவு, தயவு செய்து மீண்டும் சேர்ந்து விடுங்கள் என தனுஷுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல் இவர்களது விவாகரத்து முடிவால் நடிகர் ரஜினி கடும் மன உளைச்சல் அடைந்ததாகவும் கூறப்பட்டது. இதை அறிந்த ரஜினி ரசிகர்கள் டுவிட்டரில் தனுஷை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Tap to resize

கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ், அவ்வப்போது படம் இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. இதனை பல்வேறு மேடைகளில் அவரே கூறி இருக்கிறார்.

ஆனால் தற்போதைய சூழல் படி பார்த்தால் தனுஷின் இந்த ஆசை நிறைவேறுவதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதைப்பார்த்த ரஜினி ரசிகர்கள் ‘ஓ.. உனக்கு இந்த ஆசை வேற இருந்துச்சா... இனி வாய்ப்பில்ல ராஜா’ என கிண்டலடித்து வருகின்றனர். இதற்கு தனுஷ் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

நடிகர் தனுஷ் ஏற்கனவே தமிழில் பா.பாண்டி என்கிற படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2017-ம் ஆண்டு ரிலீசான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் எந்த படங்களையும் இயக்கவில்லை. கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என நடிப்பில் தான் கவனம் செலுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!