இது ஒருபுறம் இருக்க, நடிகர் விஷால் அட்ஜஸ்ட்மென்ட்-காக அழைக்கும் நபர்களை செருப்பால் நடிகைகள் அடிக்க வேண்டும் என்று கூறியதற்கு பதில் அளித்துள்ள நடிகை ராதிகா, "பெரும் புள்ளிகளை செருப்பால் அடித்து விட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? அதற்கு அடுத்து அந்தப் பெண்ணின் நிலை என்னவென்று யோசிக்க வேண்டாமா? விஷால் ஒரு நடிகர் சங்க தலைவராக பேசியிருக்க வேண்டும். எந்தவித பிரச்சனை நடந்தாலும் என்னிடம் வாருங்கள் புகார் அளியுங்கள், உரிய நடவடிக்கையை நான் எடுக்கிறேன் என்கின்ற தைரியத்தை அவர் கொடுத்திருக்க வேண்டும்.
நடிகைகளிடம் தவறாக நடப்பவர்களை, விஷால் செருப்பால் அடிப்பாரா? அவர் ஆம்பளை தானே, அந்த தைரியம் அவருக்கு இருக்கும் என்றால், அதே ஆளை நான் விளக்குமாறால் அடிப்பேன் என்று கட்டமாக பேசியுள்ளார் ராதிகா.
நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை; தப்பா பேசாதீங்க - பாலியல் குற்றச்சாட்டுக்கு மோகன்லால் விளக்கம்