ஒயிட் டீ -ஷர்ட்... செம்ம ஸ்டைலிஷ் ஜீன்ஸ் ஒட்டு மொத்த யங் ஹீரோயின்களை ஓரம் கட்டும் பிரியா மணி!!

நடிகை பிரியா மணி, பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தாலும்... அனைவருக்குமே முதலில் நினைவுக்கு வருவது பருத்தி வீரன் முத்தழகு கதாபாத்திரம் தான். இந்த படம் வெளியாகி சுமார் 14 வருடங்கள் ஆகும் நிலையில், மீண்டும் பழைய அழகுடன் ஸ்லிம் லுக்கில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் இளம் நாயகிகளுக்கு சவால் விடுவது போல் அமைந்துள்ளது.

priya mani

தமிழ் சினிமாவில் கியூட் ஏஞ்சலாக... "கண்களால் கைது செய்" என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியாமணி. முதல் படத்தில் அழகிய பொம்மை போல் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
 

தமிழ் சினிமாவில் கியூட் ஏஞ்சலாக... "கண்களால் கைது செய்" என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியாமணி. முதல் படத்தில் அழகிய பொம்மை போல் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
 


முத்தழகி, என்கிற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருந்தது இவரது எதார்த்தமான நடிப்பு. எனவே இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

மீண்டும் தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியான பிரியாமணி சரியான கதையை தேர்வு செய்து நடிக்காததால்... மீண்டும் திரையுலகில் சரிவை சந்தித்தார். ஒரு கட்டத்தில் திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் போக, முஸ்தப்பா ராஜ் என்பவரை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் அவ்வப்போது சில படங்களில் தலை காட்டி வந்தாலும், நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்பதில் அதிக ஆர்வம் காட்டினார்.

நீண்ட இடைவெளிக்கு பின், சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான அசுரன் பட ரீமேக், இவருக்கு சிறந்த படமாக அமைத்துள்ளது. இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து பலர் பாராட்டி வருகிறார்கள்.

இதை தொடர்ந்து அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்திலும் நடித்து வருகிறாராம், மேலும் சில பாலிவுட் படங்களிலும் நடிக்கிறார். எனவே மீண்டும் விதவிதமாக புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இளம் ரசிகர்களை இம்சித்து வருகிறார். 

Latest Videos

click me!