தமிழகத்தில் கோவில் கட்டி கும்பிடும் அளவிற்கு, தென்னிந்திய திரையுலகில் மிகவும் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை குஷ்பு.
திருமணத்திற்க்கு பின் வழக்கம் போல், இவரும் 90 களில் நாயகியாக இருந்த மற்ற நடிகைகள் போல் மூட்டையை கட்டி விடுவார் என எதிர்பார்த்த நிலையில், அழுத்தமான குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.
40 வயதை கடந்த பின்னரும், தற்போது மீண்டும் ஹீரோயின் லுக்கிற்கு மாறி, இவர் வெளியிடும் புகைப்பட அட்ராசிட்டி அளவில்லாமல் போய் கொண்டிருக்கிறது.
தனக்கு ஏற்ற மாடர்ன் உடைகள் மற்றும், சேலை அணிந்து அழகில் வசீகரிக்கிறார். அந்த வகையில் தற்போது சிவப்பு நிற புடவையில், ஸ்டாபெர்ரி பழம் போல் ஜொலிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.