மலையாளம், தமிழ், போன்ற மொழிகளில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர், நடிகை பூர்ணா. இவர் கடந்த ஆண்டு துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், மிக பிரமாண்டமாக இவருக்கு வளைகாப்பு நடந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
அதிகப்படியான சர்ச்சைகளில் சிக்காத நடிகையான பூர்ணா, கதாநாயகியாக நடிக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தமிழில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
மேலும் கடந்த ஆண்டு, தன்னுடைய குடும்பத்துடன் இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு... கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்த, இவருக்கு மிக பிரமாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது.
தன்னுடை வளைகாப்பு நிகழ்ச்சியில்... பளபளக்கும் சிவப்பு நிற பட்டு புடவையில்... அதற்க்கு ஏற்ற போல் தங்க ஆபரணங்கள் அணிந்து, அழகு தேவதை போல் ஜொலிக்கிறார்.
தமிழ் - மற்றும் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்து திறமையான நடிகை என பெயர் எடுத்து விட்ட, நடிகை பூர்ணா, திருமணத்திற்கு பின்னர் முழுமையாக சினிமாவில் இருந்து விலகிய நிலையில், துபாயில் கணவருடன் குடியேறினார்.
எனினும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தன்னை பற்றியும், குடும்பத்தினரோடு எடுக்கும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இவரின் வளைகாப்பு புகைப்படங்கள் வெளியாகவே, ரசிகர்கள் அனைவரும் தங்களின் வாழ்த்துக்களை மழை போல் பொழிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.