மலையாள நடிகையான பூர்ணா, தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர், இதைத் தொடர்ந்து 'ஆடுபுலி', 'கந்தகோட்டை', 'தகராறு', 'காப்பான்', 'தலைவி' போன்ற பல படங்களில் நடித்தார்.
இந்நிலையில் இவருக்கும், துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆசிஃப் அலி என்பவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்திருந்த நிலையில், அக்டோபர் மாதம் மிகவும் பிரமாண்டமாக துபாயில் திருமணம் நடந்தது. திருமணத்தை ரகசியமாக முடித்துக் கொண்ட பூர்ணா, சில நாட்களுக்குப் பின்னர் தன்னுடைய சமூக வலைதளத்தில் திருமண புகைப்படங்களை வெளியிட... ரசிகர்கள் பலரும் இவருடைய திருமணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நடிகை பூர்ணாவுக்கு திருமணம் ஆகி இரண்டு மாதங்களில் ஆகும் நிலையில், திடீரென தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.