வெள்ளை தாமரை போல்... முகம் சிவந்த புன்னகையோடு!! கவர்ச்சியாக போஸ் கொடுத்து கிக் ஏற்றும் நிதி அகர்வால்

First Published | Jan 24, 2022, 12:26 PM IST

தமிழ் சினிமாவிற்கு புது வரவாக இருந்தாலும், ரசிகர்களை கவரும் விதமாக கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு வருகிறார் நடிகை நிதி அகர்வால்.

'முன்னா மைகேல்' என்கிற பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். இந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கில் நடிகர் நாகர்ஜுனா, அகில் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

பின்னர் தமிழில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'பூமி' மற்றும் சிம்புவுக்கு ஜோடியாக 'ஈஸ்வரன்' ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே கடந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி... இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது.

Tap to resize

இதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இவர் நடிப்பில் முழுசாக மூன்று படங்கள் கூட தமிழில் இன்னும் வெளியாகாத நிலையில்... இவருக்கு சென்னையில் உள்ள ரசிகர்கள் கோவில் காட்டிய சம்பவமும் சமீபத்தில் அரங்கேறியது. முன்னணி நடிகைகளையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

தமிழ் சினிமாவிற்கு புது வரவாக இருந்தாலும், வளர்ந்த ஹீரோக்களுடன் தான் ஜோடி போட வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளார் என்பது இவர் தேர்வு செய்யும் படங்களில் இருந்தே தெரிகிறது.

மேலும் ரசிகர்களை கவரும் விதமாக கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு வாய்ப்பு தேடுவதை வழக்கமாக வைத்துள்ளார் நிதி அகர்வால்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Latest Videos

click me!