Nayanthara New Business : ரூ.100 கோடி முதலீட்டில் புது பிசினஸ்! ஓஹோ... நயனின் துபாய் விசிட் இதுக்குத்தானா?

Ganesh A   | Asianet News
Published : Jan 12, 2022, 06:42 AM IST

புத்தாண்டு கொண்டாட காதலனுடன் துபாய் சென்றிருந்த நயன், அங்கு சில நாட்கள் தங்கி புது பிசினஸ் தொடர்பான வேலைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

PREV
17
Nayanthara New Business : ரூ.100 கோடி முதலீட்டில் புது பிசினஸ்! ஓஹோ... நயனின் துபாய் விசிட் இதுக்குத்தானா?

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும், அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் நடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். 

27

அண்மையில் பாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளார். அங்கு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவ்வாறு நடிப்பில் பிசியாக இருக்கும் நயன்தாரா, சில தொழில்களிலும் முதலீடு செய்துள்ளார். 

37

அந்த வகையில், இவரும், இவரது காதலன் விக்னேஷ் சிவனும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்கிற பட நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இதுதவிர சாய் வாலா என்கிற டீ கம்பெனியிலும் நயன்தாரா பார்ட்னராக உள்ளார்.

47

கடந்த மாதம் ‘தி லிப் பாம் கம்பெனி’ என்கிற பிராண்ட் மூலம் அழகு சாதன பொருள் தயாரிப்பில் அடியெடுத்து வைத்தார் நயன். இவ்வாறு நடிப்பை தாண்டி தொழிலதிபராகவும் ஜொலித்து வரும் நயன் தற்போது மேலும் ஒரு பிஸினஸை தொடங்க உள்ளாராம்.

57

அதன்படி துபாயில் ரூ.100 கோடி முதலீட்டில் எண்ணெய் பிசினஸ் செய்ய நடிகை நயன்தாரா முடிவெடுத்துள்ளதாகவும், தற்போது அதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

67

புத்தாண்டு கொண்டாட காதலனுடன் துபாய் சென்றிருந்த நயன், அங்கு சில நாட்கள் தங்கி புது பிசினஸ் தொடர்பான வேலைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

77

நயன்தாராவுக்கு இந்தாண்டு திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுவதால், அவர் திருமணத்துக்கு பின் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு பிசினஸை கவனிக்க உள்ளதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories