bigg boss Abhirami : சிம்புவுக்கு முன்னரே டாக்டர் பட்டம் பெற்ற பிக்பாஸ் அபிராமி...எந்த பீல்டில் தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : Jan 11, 2022, 07:58 PM IST

நடிகை அபிராமி வெங்கடாச்சலம் தெரசா பல்கலைக் கழகத்தின் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பரதநாட்டியம் நடனக்கலைக்காக அவருக்கு இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

PREV
18
bigg boss Abhirami  : சிம்புவுக்கு முன்னரே டாக்டர் பட்டம் பெற்ற பிக்பாஸ் அபிராமி...எந்த பீல்டில் தெரியுமா?
simbu

ஏற்கனவ எம்ஜிஆர், சிவாஜி, கமல்ஹாசன். விக்ரம், விஜய் ஆகியோர் கவுரவ டாக்டர் பட்டம் வழங்ககப்பட்டதை தொடர்ந்து தற்போது அந்த வரிசையில் சிம்பு இணைந்துள்ளர்.. 

28
simbu

சிம்புக்கு இன்று ( ஜனவரி 11) திரைத்துறையில் சிம்புவின் சிறப்பான பங்களிப்பை பாராட்டி அவருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குகிறது. 

38
Abhirami Venkatachalam

ம்புவை தொடர்ந்து இன்று பிம்பாஸ் பிரபலம் அபிராமியும் கௌரவ டாக்டர் பட்டத்தை பெற்றுள்ளார்..பல விளம்பரங்களில் தோன்றி, ரசிகர்களை ரசிக்க வைத்த அக்மார்க் தமிழ்நாட்டு மாடல் தான் நடிகை அபிராமி  வெங்கடாச்சலம்.

48
Abhirami Venkatachalam

பல பேஷன் ஷோ... மற்றும் மாடலிங் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அசத்தியவர். மாடலிங் துறையில் உள்ள அனுபவத்தை வைத்து பல படங்களில் நடிக்க முயற்சி செய்து வந்த நடிகை அபிராமிக்கு, முதல் படமே தலயுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு, இவருக்கு அடித்த ஜாக்பார்ட் என்று தான் சொல்ல வேண்டும்.

58
Abhirami Venkatachalam

பாலிவுட் திரையுலகில் நடிகர் அமிதாப் பச்சன் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த, பிங்க் படத்தின் ரீமேக் 'நேர்கொண்ட பார்வை' என்கிற பெயரில்... தல நடிப்பில் உருவானது. இந்த படத்தில், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த அபிராமி வெங்கடாச்சலம், படம் வெளியாவதற்கு முன்பாகவே தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார்.
 

68
Abhirami Venkatachalam

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பமான முதல் ஓரிரு நாட்களிலேயே கவினை காதலிப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் முகேன் மீது காதலோடு இருப்பதாக இவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் இவர் நடித்த முதல் படம்  'நேர்கொண்ட பார்வை'.

78
Abhirami Venkatachalam

 'நேர்கொண்ட பார்வைக்கு' நல்ல வரவேற்பு கிடைத்த போதிலும், அடுத்தடுத்த பட வாய்ப்புக்கள் கிடைக்காமல் தற்போது வரை திண்டாடி வருகிறார். எப்படியாவது பட வாய்ப்பை பெற வேண்டும் என்கிற முயற்சியில், தீவிரமாக செயல்படும் அபிராமி... 

88
Abhirami Venkatachalam

இந்நிலையில் நடிகை அபிராமி வெங்கடாச்சலம் தெரசா பல்கலைக் கழகத்தின் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பரதநாட்டியம் நடனக்கலைக்காக அவருக்கு இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories