Nayanthara Celebrates Diwali: நடிகை நயன்தாரா பிரபல நடிகர் மற்றும் அவருடைய குடும்பத்தோடு தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது, சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக மின்னிக்கொண்டிருந்தவர் நயன்தாரா. பின்னர் இந்த பெயரால் சில சிரமங்களுக்கு ஆளாக, தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு கேட்டுக்கொண்டார். எனினும் ஒரு சில ரசிகர்கள் இவரை தொடர்ந்து லேடீஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதையும் பார்க்க முடிகிறது.
26
பான் இந்தியா ஸ்டாராக மாறிய நயன்தாரா:
தமிழை தவிர, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நயன்தாரா அடுத்தடுத்து கமிட் ஆகி நடித்து வருகிறார். தென்னிந்திய அளவில் மட்டுமே பிரபலமான இவரை, பான் இந்தியா ஸ்டாராக மாற்றியது என்றால் அது அட்லீ இயக்கத்தில், கடந்த 2023-ஆம் ஆண்டு ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பில் வெளியான 'ஜவான் ' திரைப்படம் தான். இந்த படத்திற்கு பின்னர் நயன்தாராவுக்கு அடுத்தடுத்து பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வந்தாலும், நயன்தாரா கதைக்கு மற்றும் இன்றி தன்னுடைய கதாபாத்திரத்துக்கும் அதிக முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
36
தோல்வியை தழுவிய டெஸ்ட்:
கடைசியாக நயன்தாரா நடிப்பில் டெஸ்ட் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியானது. இந்த படத்தில் நடிகர் ஆர்.மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் சித்தார்த் மற்றும் மீரா ஜாஸ்மின் ஆகியோரும் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். பெரிய ஸ்டார் காஸ்டிங்குடன் படம் ரிலீஸ் ஆன போதிலும் தோல்வியை சந்தித்தது. தற்போது இவரது கைவசம், மண்ணாங்கட்டி, டாக்சிக் போன்ற படங்கள் உள்ளது.
46
சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்:
அதே போல், நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக 'மனசங்கர வரப்பிரசாத் காரு' என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் நயன்தாரா - சிரஞ்சீவி இணைந்து நடிப்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.
56
சிரஞ்சீவியின் தீபாவளி ட்ரீட்:
இந்த நிலையில் தான், சிரஞ்சீவி மற்றும் அவருடைய குடும்பத்தினருடன் இணைந்து இந்த தீபாவளியை நயன்தாரா கொண்டாடியுள்ளார். தீபாவளிக்காக சிரஞ்சீவியின் குடும்பத்தினர், தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு விருந்து வைத்து கொண்டாடியுள்ளார். கூடவே சிறப்பு பரிசுகளையும் வழங்கியுள்ளனர். இந்த கொண்டாட்டத்தில், நாகர்ஜுனா, அமலா, வெங்கடேஷ் ஆகியோர் தங்களின் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளனர்.
66
நயன்தாராவுக்கு கிடைத்த அரிய பரிசு:
இந்த நிலையில் தான், சிரஞ்சீவி மற்றும் அவருடைய குடும்பத்தினருடன் இணைந்து இந்த தீபாவளியை நயன்தாரா கொண்டாடியுள்ளார். தீபாவளிக்காக சிரஞ்சீவியின் குடும்பத்தினர், தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு விருந்து வைத்து கொண்டாடியுள்ளார். கூடவே சிறப்பு பரிசுகளையும் வழங்கியுள்ளனர். இந்த கொண்டாட்டத்தில், நாகர்ஜுனா, அமலா, வெங்கடேஷ் ஆகியோர் தங்களின் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளனர்.