அட கடவுளே... சமந்தாவை போல் நடிகை நந்திதாவுக்கு இப்படி ஒரு அரியவகை நோய் பாதிப்பா? அவரே கூறிய அதிர்ச்சி தகவல்

Published : Jul 19, 2023, 09:45 AM IST

தமிழில் அட்டக்கத்தி, முண்டாசுப்பட்டி, புலி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை நந்திதா, அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறாராம்.

PREV
15
அட கடவுளே... சமந்தாவை போல் நடிகை நந்திதாவுக்கு இப்படி ஒரு அரியவகை நோய் பாதிப்பா? அவரே கூறிய அதிர்ச்சி தகவல்

கர்நாடகாவை சேர்ந்தவர் நந்திதா. விஜே-வாக பணியாற்றி வந்த இவர் கடந்த 2008-ம் ஆண்டு வெளிவந்த நந்தா லவ்ஸ் நந்திதா என்கிற கன்னட படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்த அவர் பா.இரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்ததோடு, மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது.

25

அட்டக்கத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து பேமஸ் ஆனார் நந்திதா. பின்னர் இவருக்கு நடிகர் விஜய்யுடன் புலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படம் பிளாப் ஆனதால் படிப்படியாக பட வாய்ப்புகளை இழந்து வந்த நந்திதா, ஒரு கட்டத்தில் தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு திரையுலகிற்கு தாவினார்.

35

தெலுங்கில் அவருக்கு அடுத்தடுத்து வித்தியாசமான வேடங்கள் கிடைத்து வருவதால் அக்கட தேசத்திலேயே செட்டில் ஆகிவிட்டார் நந்திதா. தற்போது நடிகை நந்திதா நடிப்பில் ஹிடிம்பா என்கிற தெலுங்கு திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படம் வருகிற ஜூலை 20-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகளும் படு ஜோராக நடைபெற்று வருகிறது. 

இதையும் படியுங்கள்... சிகரெட் வாங்க கூட காசு இல்ல.. டாக்சி ஓட்டுனேன்; லவ் பிரேக் அப் ஆனதால் தற்கொலைக்கு முயன்றேன்- அப்பாஸ் ஓபன் டாக்

45

இந்த நிலையில், ஹிடிம்பா படத்தின் புரமோஷனுக்காக பேட்டி ஒன்றை அளித்திருந்த நடிகை நந்திதா, அதில் தனக்கு இருக்கும் அரிய வகை நோய் பாதிப்பு குறித்து மனம்திறந்து பேசி உள்ளார். அதன்படி தனக்கு ஃபைப்ரோமியால்ஜியா என்கிற தசைக் கோளாறு நோயால் அவதிப்படுவதாக அவர் கூறி உள்ளார். இந்த நோய் பாதிப்பால் உடல் எடையில் ஏற்ற இறக்கம் ஏற்படும் என்றும், ஒரு சின்ன வேலை செய்தால் கூட தசைகளில் பிரச்சனை ஏற்பட்டுவிடும் அளவுக்கு இந்த நோய் தீவிரமானது என கூறி உள்ள அவர், இதன் காரணமாக தான் கடினமான உடற்பயிற்சிகளை செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

55

சில சமயங்களில் உடல் அசைவுகளுக்கே கஷ்டப்படும் அளவுக்கு இதன் பாதிப்பு இருக்கும் என கூறியுள்ள அவர், இதனால விரைவில் சோர்வடைவதோடு, நினைவாற்றல் குறைபாடுகளும் ஏற்படுத்தும் என்று தெரிவித்திருக்கிறார். இதையெல்லாம் தாண்டி தான் ஹிடிம்பா படத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்ததாக நந்திதா தெரிவித்துள்ளார். நடிகை சமந்தா மயோசிடிஸ் நோய் பாதிப்பால் அவதிப்படுவதை போல் நடிகை நந்திதாவும் ஃபைப்ரோமியால்ஜியா என்கிற நோயால் அவதிப்படுவதை அறிந்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... த்ரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் நெஞ்சில் டாட்டூ குத்திய பிக்பாஸ் ரக்ஷிதா! என்ன போட்டுருக்காங்க பாருங்க!

click me!

Recommended Stories