Abbas
கதிர் இயக்கத்தில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான காதல் தேசம் படம் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் அப்பாஸ். முதல் படத்திலேயே பெண்களின் மனம் கவர்ந்த நாயகனாக உருவெடுத்த அப்பாஸ், சாக்லேட் பாய் ஆகவும் வலம் வந்தார். அடுத்தடுத்து இவருக்கு காதல் பட வாய்ப்புகள் குவிந்தன. அதிக பட வாய்ப்பு வந்ததன் காரணமாக இவர் காதலுக்கு மரியாதை, ஷங்கரின் ஜீன்ஸ் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் பட வாய்ப்புகளை இழக்கும் அளவுக்கு செம்ம பிசியாக இருந்தார்.
Abbas
விஐபி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், படையப்பா, ஹேராம், மின்னலே, ஆனந்தம், பம்மல் கே சம்மந்தம் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த அப்பாஸ், தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்தார். சினிமா ஒருவரை எந்த அளவுக்கு உச்சத்துக்கு கொண்டு செல்லுமோ, அதே அளவு சறுக்கலையும் கொடுக்கும். அதற்கு அப்பாஸே ஒரு உதாரணம். தொடர்ந்து அவர் நடித்த சில படங்கள் தோல்வியை சந்தித்ததால் ஆளே அட்ரஸ் இல்லாமல் போனார் அப்பாஸ்.
சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் குடும்பத்துடன் நியூசிலாந்துக்கு சென்று செட்டில் ஆன அப்பாஸ், அதன்பின் சினிமா பக்கம் தலைகாட்டவே இல்லை. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அப்பாஸ், சினிமாவை விட்டு விலகிய பின்னர் தான் எதிர்கொண்ட கஷ்டங்கள் பற்றி மனம்விட்டு பேசி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... த்ரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் நெஞ்சில் டாட்டூ குத்திய பிக்பாஸ் ரக்ஷிதா! என்ன போட்டுருக்காங்க பாருங்க!
Abbas
அதில் அவர் கூறியதாவது : “10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெயில் ஆனதால் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். ஒரு சூழலில் காதலியும் என்னை விட்டு பிரேக் அப் செய்து பிரிந்ததால், சாலையில் செல்லும் வாகனத்தில் விழுந்து செத்துடலாம்னு நினைச்சேன். அப்படி செய்தால் அது அந்த வாகன ஓட்டியையும் பாதிக்கும் என்பதனால் அப்படி செய்யவில்லை.
சினிமாவில் நான் நடிச்ச முதல்படமே ஹிட், அதன்பின்னர் சில தோல்விகளை சந்தித்ததால் பொருளாதார ரீதியாக சறுக்கலை சந்தித்தேன். வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாம, சிகரெட் வாங்க கூட காசு இல்லாம தவித்திருக்கேன். சினிமாவில் அடுத்தடுத்த தோல்விகளால் நடிப்பின் மீது வெறுப்பு வந்தது, அதனால் தான் குடும்பத்துடன் நியூசிலாந்துக்கு சென்றுவிட்டேன்.
Abbas
அங்கு சென்றதும் ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. குடும்பத்துக்காக மெக்கானிக்காக வேலை பார்த்திருக்கேன், டாக்சி ஓட்டி இருக்கேன். இப்போதும் என்னை மீண்டும் நடிக்க வருமாறு அழைத்து ஏராளமானோர் மெசேஜ் அனுப்புகிறார்கள். அதுபோல எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாகவும், நான் இறந்துவிட்டதாகவும் சில தவறான வதந்திகள் பரவுகின்றன. அவையெல்லாம் நான் இந்தியா வந்தால் சரியாகி விடும்” என கூலாக தெரிவித்துள்ளார் அப்பாஸ்.
இதையும் படியுங்கள்... சான் டியாகோ காமிக்-காம் 2023 நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்ற பிரபாஸ் - ராணா! வைரலாகும் புகைப்படம்!