விஜயகாந்த் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான எங்கள் அண்ணா திரைப்படம் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை நமீதா. இதன்பின் ஏய், விஜய்யின் அழகிய தமிழ்மகன், அஜித்துடன் பில்லா என தொடர்ந்து பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து கோலிவுட்டின் கனவுக்கன்னியாக வலம் வந்தார் நமீதா.
25
2010-ம் ஆண்டு வரை தமிழ் திரையுலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக கோலோச்சி வந்த நமீதாவின் கெரியர் அதன் பின் அப்படியே தலைகீழாக மாறியது. அவரது உடல் எடை அதிகரித்தது தான் இதற்கு முக்கிய காரணம். இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில ஆண்டுகள் இருந்து வந்தார்.
இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு வீரா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் ஒருசில படங்களில் நடித்து வந்த இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில், தற்போது அந்த குழந்தைகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்தியுள்ள நமீதா, அதன் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
45
அதில் தனது மகன்களுக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என பெயரிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், மேலும் பதிவிட்டுள்ளதாவது : “இவர்கள் தான் கிருஷ்ணனால் எனக்கு பரிசளிக்கப்பட்ட இரண்டு அழகான குட்டி அதிசயங்கள். எனக்கு கிடைத்த விலைமதிப்பற்ற பரிசு இவர்கள். முன்னதாக கிருஷ்ணனின் பெயரை என் பிள்ளைகளுக்கு சூட்டுவேன் என உறுதியளித்து இருந்தேன்.
55
எனது நன்றியை காட்டுவதற்கான வழி இது. பெயர்சூட்டு விழா என்னுடைய சொந்த ஊரான சூரத்தில் நடைபெற்றது. எனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர். உங்கள் அனைவரது அன்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.