நடிகர் வீரா என்பவரை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார் நமீதா, திருமணத்துக்கு பின்னர் உடல் எடை அதிகரித்ததால் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட அவர், குடும்பத்தை கவனித்து வந்தார். இன்று 41-வது பிறந்தநாள் கொண்டாடும் நமீதாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், பிறந்தநாளன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நமீதா. அதன்படி, தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ள அவர், தாய்மை எனும் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளதாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். மேலும் கர்ப்பமான வயிற்றுடன் எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Ira Khan Birthday : பிகினி உடையில் பிறந்தநாள் கொண்டாடிய அமீர்கான் மகள்... வைரலாகும் பர்த்டே கிளிக்ஸ்