சினேகா வீட்டிற்கு மகள் நைனிகாவுடன் விசிட் அடித்த மீனா... களைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்...!

First Published | Jan 26, 2021, 7:47 PM IST

சினேகா மகளின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை மீனா, தன்னுடைய மகள் நைனிகாவுடன் அவருடைய வீட்டிற்கு சென்று குட்டி பாப்பாவிற்கு வாழ்த்து கூறியுள்ளார். 

நடிகர் பிரசன்னா, புன்னகை அரசி சினேகாவை கடந்த 2012ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர காதல் தம்பதிக்கு தற்போது 4 வயதில் விஹான் என்ற மகன் உள்ளார்.
திருமணத்திற்கு பிறகும் அவ்வப்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார் சினேகா. கடந்த பொங்கலுக்கு விருந்தாக வெளியான பட்டாசு திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த சினேகா, இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் போது அடிமுறை என்ற தற்காப்பு கலையை பயின்ற வீடியோக்கள் வெளியாகி வைரலாகின.
Tap to resize

இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த சினேகாவிற்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அழகிய பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.அந்த குழந்தைக்கு ஆத்யந்தா என பெயர் வைத்துள்ளனர்.
சினேகா - பிரசன்னா தம்பதியின் செல்ல மகள் முதல் பிறந்தநாள் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் இயக்குநர் ஹரியின் மனைவியான ப்ரீத்தாஉள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மஞ்சள் நிற உடையில் ரசிகர்களின் மனதை சினேகா கொள்ளையடித்தார். அழகிய பிங்க் நிற கவுனில் குட்டி பாப்பா ஆத்யந்தா ஜொலி ஜொலித்தார்.
சினேகா மகளின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை மீனா, தன்னுடைய மகள் நைனிகாவுடன் அவருடைய வீட்டிற்கு சென்று குட்டி பாப்பாவிற்கு வாழ்த்து கூறியுள்ளார்.
அழகிய பிங்க் நிற சுடிதாரில் மீனாவும், அசத்தலான ரெட் கலர் கவுனில் நைனிகாவும் கலர் ஃபுல்லாக போஸ் கொடுத்த போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!