பூனைக்கு பிறந்த நாள் கொண்டாடிய மஞ்சிமா.. லோகியின் பர்த்டே கொண்டாட்டம்

Kanmani P   | Asianet News
Published : May 24, 2022, 06:04 PM IST

பூனை பிரியரான எஃப்.ஐ.ஆர் இயக்குனர் மனு ஆனந்தை சந்தித்தவுடன், நான் பூனைகளை விரும்ப ஆரம்பித்து பூனை பிரியர் ஆனேன் என நடிகை மஞ்சிமா கூறியுள்ளார்.

PREV
15
பூனைக்கு பிறந்த நாள் கொண்டாடிய மஞ்சிமா.. லோகியின் பர்த்டே கொண்டாட்டம்
Manjima Mohan

 நட்சத்திரங்களில் பலர் அடிக்கடி சமூக ஊடகங்களில் தங்கள் அழகான செல்லப்பிராணிகளுடன் இடுகைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களில் மஞ்சிமா மோகனும்  ஒருவர். லோகி என்று பெயரிடப்பட்ட ஒரு அழகான பூனையை செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார்..இந்நிலையில் லோகி தனது பிறந்தநாளைக் கொண்டாடும் போஸ்டுகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

25
Manjima Mohan

அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள ரீலில், லோகியின் அழகான படங்கள் மற்றும் வீடியோக்களின் படத்தொகுப்பு மற்றும்  "பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் சன்ஷைன்  ஐ லவ் யூ தி மோஸ்ட்" குறிப்பிட்டுள்ளார்.

35
Manjima Mohan

இதையடுத்து ரைசா வில்சன் மற்றும் ரெபா மோனிகா ஜான் போன்ற பிற நட்சத்திரங்கள் உட்பட சமூக ஊடக பயனர்கள் ஏற்கனவே லோகியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். மேலும் லோகிக்கு சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

45
Manjima Mohan

தனது செல்லப்பிராணி குறித்து பகிர்ந்துள்ள நடிகை.. சிறுவயதில் செல்லப்பிராணிகளை வளர்க்க என் பெற்றோர் அனுமதிக்கவில்லை. ஆனால் நான் எப்போதும் விலங்குகளை நேசிக்கிறேன். நான் சென்னைக்கு குடிபெயர்ந்தவுடன், ஒரு செல்லப்பிராணியை வைத்திருக்க முடிவு செய்தேன், பின்னர்  பூனை பிரியரான எஃப்.ஐ.ஆர் இயக்குனர் மனு ஆனந்தை சந்தித்தவுடன், நான் பூனைகளை விரும்ப ஆரம்பித்து பூனை பிரியர் ஆனேன். அவரிடம் 10 க்கும் மேற்பட்ட பூனைகள் உள்ளன, நான் ஒரு பூனையை வைத்திருந்தால் என் வாழ்க்கை மாறும் என்று அவர் என்னிடம் கூறினார். லோகியை சந்திக்கும் வரை நான் பூனையை விரும்பவில்லை.. அவர் என் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டு வந்தார் என கூறியுள்ளார்.

55
Manjima Mohan

கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான அச்சம் என்பது மடமையடா படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான மஞ்சிமா மோகன்.சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சத்ரியன், பின்னர் முத்தையா இயக்கிய தேவராட்டம் படத்தில் கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்தார். மேலும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப்.ஐ.ஆர்  படத்தில் தோன்றியிருந்தார் மஞ்சிமா.  இதற்கிடையே இவரும் கௌதம் கார்த்தியும் காதலிப்பதாக வதந்திகள் பரவின ஆனால் மஞ்சிமா அதை முற்றிலும் மறுத்திருந்தார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories