சௌரவ் கங்குலி குறித்து ஆர்வம் காட்டும் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா...என்ன விஷயம் தெரியுமா?

Published : May 24, 2022, 04:36 PM IST

சௌரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றை இயக்க ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ஆர்வம் காட்டி வருவதாக தகவல் பரவி வருகிறது.

PREV
15
சௌரவ் கங்குலி குறித்து ஆர்வம் காட்டும் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா...என்ன விஷயம் தெரியுமா?
AISHWARYA RAJINIKANTH

தனுஷ் பிரிவுக்கு பிறகு தனது வேளைகளில் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந் தற்போது கொல்கத்தாவில் தனது இரண்டு மகன்களுடன் ஐபிஎல் ப்ளேஆஃப் மற்றும் எலிமினேட்டர் போட்டிகளைக் காண சென்றுள்ளார்.. இந்நிலையில்  திங்கள்கிழமை இரவு, அவர் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

25
AISHWARYA RAJINIKANTH

கிரிக்கெட் ஜாம்பவானாக இருந்த சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றை இயக்குவதில் ஐஸ்வர்யா ஆர்வம் காட்டுவதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  ஏற்கனவே கிரிக்கெட் வீரரான தோனி, கபில் தேவ் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு விட்டது. அதுபோல இந்திய பெண்கள் கிரிக்கெட் டீம் கேப்டன் மித்தாலி ராஜ் பையோகிராஃபி படமாக்கப்பட்டு வருகிறது. 

35
Sourav Ganguly

இந்த வகையில் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க ஐஸ்வர்யா விரும்புவதாக கூறப்படுகிறது. பாலிவுட் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டும் ஐஸ்வர்யாவின் வருகை இந்த படத்தை உறுதி செய்துள்ளதாகவும் பேசப்படுகிறது.. 

45
Sourav Ganguly

முன்னதாக ஐஸ்வர்யா ஒரு திறமையான திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகி. 2012 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான '3' மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பிறகு ஐஸ்வர்யா மற்றொரு தமிழ் படமான 'வை ராஜா வை' மற்றும் 'சினிமா வீரன்' என்ற ஆவணப்படத்தையும் இயக்கியுள்ளார்.

55
AISHWARYA RAJINIKANTH

இதற்கிடையில், சௌரவ் சமீபத்தில் தனது வாழ்க்கை வரலாறு இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் தியேட்டர்களுக்கு வர நீண்ட நேரம் எடுக்கும் என்று சௌரவ் கங்குலி கூறினார். உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் பலர் கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர், ஹிருத்திக் ரோஷன் , ரன்பீர் கபூர் , சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக நடிக்க ஆர்வம் காட்டுவதாகவும் தகவல் உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories