kushboo Daughter : அச்சு அசல் அம்மா குஷ்பு போலவே இருக்கும் மகள்!! ஆச்சர்யப்பட வைக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்

Ganesh A   | Asianet News
Published : Jan 16, 2022, 12:31 PM IST

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை குஷ்புவின் சமீபத்திய டுவிட்டர் பதிவு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

PREV
16
kushboo Daughter : அச்சு அசல் அம்மா குஷ்பு போலவே இருக்கும் மகள்!! ஆச்சர்யப்பட வைக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்

இந்தியா சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரியாக இருப்பவர் நடிகை குஷ்பு, அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் முதல் முதலில் கோவில் கட்டினர். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை தற்போது வரை தன்வசம் வைத்துள்ளார்.

26

90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி முன்னணி ஹீரோக்களும் குஷ்புவுடன் ஜோடி போட காத்திருந்தனர். அப்போது எப்படி சினிமாவில் பிசியாக இருந்தாரோ அதே போல் தான் இப்போதும், சினிமா, அரசியல், சின்னத்திரை என சகலகலா வள்ளியாக சுற்றிச் சுழல்கிறார்.

36

சினேகா - பிரசன்னா, சூர்யா - ஜோதிகா என பல நட்சத்திர தம்பதிகள் தற்போது கோலிவுட்டில் வலம் வந்தாலும், இன்றளவும் பலரும் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு வாழ்த்து வரும் க்யூட் ஜோடி குஷ்பு - சுந்தர் சி தான்.

46

1995ம் ஆண்டு ஜெயராம், குஷ்பு, மனோரமா, கவுண்டமனி நடித்த முறைமாமன் படத்தை சுந்தர் சி இயக்கினார். அப்போது குஷ்புவிற்கும், சுந்தர் சிக்கும் இடையே காதல் தீ பற்றியது. அன்று முதல் இன்று வரை ஒன்றுபட்ட உள்ளத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். 

56

நடிகை குஷ்புவுக்கு 2 பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். அதில் குஷ்புவின் இளைய மகள் அனந்திதா, தனது தந்தை சுந்தர் சி-யுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள குஷ்பு, தந்தை - மகளின் பாசப்பினைப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.

66

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அனந்திதா அப்படியே குஷ்பு போல் இருப்பதாக கமெண்ட் செய்து வருவதோடு, அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளைவும் குவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories