Kushboo Viral Photo : ச்சீ.. ச்சீ.. குஷ்புவா இப்படி? நடிகைக்கு உதட்டோடு உதடு முத்தம்! வைரலாகும் பழைய போட்டோ!

Published : Dec 21, 2021, 01:05 PM ISTUpdated : Dec 21, 2021, 02:08 PM IST

நடிகை குஷ்பு (Kushboo) சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல்... நடிகை ஒருவருக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பது போல் எடுத்து கொண்ட பழைய புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
18
Kushboo Viral Photo : ச்சீ.. ச்சீ.. குஷ்புவா இப்படி? நடிகைக்கு உதட்டோடு உதடு முத்தம்! வைரலாகும் பழைய போட்டோ!

இந்தியா சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரியாக இருப்பவர் நடிகை குஷ்பு, அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் முதல் முதலில் கோவில் கட்டினர். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை தற்போது வரை தன்வசம் வைத்துள்ளார்.

 

28

குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் வெள்ளித்திரை வாய்ப்புகள் குறைந்தாலும், சின்னத்திரையில் ஹீரோயின் அவதாரம் எடுத்து நடித்தார். மேலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

 

38

சமீபத்தில் கூட, இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த (Rajinikanth) 'அண்ணாத்த' (Annaatthe) திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. குஷ்பு சிறிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்திருந்தாலும், நீண்ட இடைவெளிக்கு பின்னர் குஷ்பு - மீனா (Meena) என இருவரையும் தலைவரோடு சேர்த்து பார்க்கும் பாக்கியம் ரசிகர்களுக்கு கிட்டியது.

 

48

திரைப்படங்கள் மட்டும் இன்றி அரசியலிலும் திமுக, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து தற்போது பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

 

58

அதே நேரம் தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து... ஓவர் ஸ்லிம் லுக்கில் மீண்டும் சின்னத்தம்பி பட ஹீரோயின் போல் உள்ளார். மேலும் தன்னுடைய அழகை வெளிப்படுத்தும் விதமாக, அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

 

 

 
68

இந்த புகைப்படங்கள் தான் ஒரு பக்கம் குஷ்பு ரசிகர்களால் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது என்றால், மற்றொரு சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத குஷ்பு-வின் பழைய புகைப்படம் ஒன்று வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

 
78

கடந்த 1985 ஆம் ஆண்டு, 'ஸ்டார்டஸ்ட்' என்கிற மேகசீனுக்காக எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், பிரபல பாலிவுட் நடிகை ஃபரா-விற்கு உதட்டோடு உதடு வைத்து குஷ்பு முத்தம் கொடுப்பது போல் உள்ளது. (நன்றி ஸ்டார்டஸ்ட்)

 

88

மிகவும் பழைய புகைப்படமாக இந்தாலும், குஷ்புவின் இந்த செயலும்... புகைப்படமும் பார்க்கும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. (நன்றி ஸ்டார்டஸ்ட்)

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories