ஜனநாயக கடமையாற்றிய கீர்த்தி சுரேஷ்... அப்பா, அம்மாவுடன் வெளியிட்ட க்யூட் போட்டோ...!

First Published | Apr 6, 2021, 7:52 PM IST

தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தன்னுடைய குடும்பத்தினருடன் வாக்களித்த புகைப்படத்தை சோசியல்  மீடியாவில் பதிவிட்டுள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திரையுலகினர் பலரும் தங்களது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்து வருகின்றனர். திரைப்பிரபலங்களிலேயே முதல் ஆளாக நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் 20 நிமிடம் முன்னதாகவே சென்று 6.55 மணிக்கு வாக்காளித்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலும், தல அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரிலும், சிவகார்த்திகேயன் வளசரவாக்கத்திலும், நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு ஆகியோர் குடும்பத்துடன் தியாகராய நகரிலும், தளபதி விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளிலும் வந்து வாக்களித்தனர்.
Tap to resize

ராமதாஸ், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கமல் ஹாசன், சீமான் உள்ளிட்ட பலரும் தங்களது தொகுதியில் வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தன்னுடைய குடும்பத்தினருடன் வாக்களித்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
அப்பா சுரேஷ்குமார், அம்மா மேனகா, அக்கா ரேவதியுடன் வெள்ளை நிற குர்தா, கர்லி ஹேர் ஸ்டைலில் கை விரலில் மையுடன் கீர்த்தி சுரேஷ் கொடுத்துள்ள போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஜனநாயக கடமையாற்றிய ஆள்காட்டி விரல் மை அடையாளத்துடன் தனது செல்ல நாய்குட்டி அருகில் நின்ற படி கீர்த்தி சுரேஷ் கொடுத்த போஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!