'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் டைட்டில் வென்றது இவரா? வெளியான தகவல்...!

First Published Apr 6, 2021, 5:55 PM IST

விஜய் டிவியில் தற்போது ஒட்டு மொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக மாறியுள்ளது 'குக் வித் கோமாளி'. இந்த நிகழ்ச்சியின் ஃபைனல் இந்த வாரம் நடைபெற உள்ள நிலையில், வெற்றியாளர் யார் என்பது குறித்த தகவல் வைரலாக பரவி வருகிறது. 
 

விஜய் டிவியில் தற்போது ஒட்டு மொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக மாறியுள்ளது 'குக் வித் கோமாளி'. இந்த நிகழ்ச்சியின் ஃபைனல் இந்த வாரம் நடைபெற உள்ள நிலையில், வெற்றியாளர் யார் என்பது குறித்த தகவல் வைரலாக பரவி வருகிறது.
undefined
முதல் சீசன் சுமாரான வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பிரபலங்களுக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவும் துவங்கிவிட்டது.
undefined
மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் வயல் கார்டு சுற்று மூலம் மேலும் இருவர், இறுதி நிகழ்ச்சிக்கும் நுழைந்தனர்.
undefined
கடந்த வாரமே குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பைனல் நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக Celebration வாரமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரபலங்கள் அனைவரும் தங்களுடைய நண்பர், உறவினர், சகோதரி, ஆகியோரோடு வருகை தந்து செம்ம என்டர்டெய்ன் செய்தனர்.
undefined
இதை தொடர்ந்து இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பைனலுக்கான ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில்... வெற்றியாளர் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளது.
undefined
தற்போது வெளியாகியுள்ள தகவலில், பைனலில்.... கனி டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
undefined
மேலும் இரண்டாவது இடத்தை அஸ்வின் மற்றும் ஷகிலா ஆகிய இருவரின் ஒருவர் கைப்பற்றியுள்ளதாகவும், பலரும் எதிர்பார்த்த பாபா பாஸ்கர் மூன்றாவது இடத்தை கை பற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து தற்போது வரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
undefined
click me!