தளபதி விஜய் சைக்கிளில் வந்து வாக்களிக்க காரணம் என்ன?... வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்...!

First Published Apr 6, 2021, 1:20 PM IST

இதனால் சோசியல் மீடியாவில் தீயாய் விவாதங்கள் பற்றி எரிந்த நிலையில், நடிகர் விஜய் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
 

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அதைவிட விறுவிறுப்பாக தளபதி விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்த விவகாரம் பேசு பொருளாக மாறியுள்ளது.
undefined
தளபதி விஜய் பனையூரில் உள்ள தன்னுடைய இல்லத்தில் இருந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார். விஜய் வாக்களிக்க வருவதை அறிந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டதால், காவல்துறையினர் பாதுகாப்புடன் விஜய்யை அழைத்துச் சென்று வாக்களிக்க வைத்தனர்.
undefined
விஜய் சைக்களில் வந்து வாக்களித்தது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறித்த தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்ய விஜய் சைக்களில் வந்ததாகவும், இல்லை அந்த சைக்கிளில் உள்ள கருப்பு, சிவப்பு நிறம் குறிப்பிட்ட கட்சியை குறிப்பதாக கூறி சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
undefined
இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலினும் பெட்ரோல் விலை உயர்வை குறிக்கும் வகையில் விஜய் சைக்கிளில் வந்திருக்கலாம் என கொளுத்திப்போட்டார். இதனால் சோசியல் மீடியாவில் தீயாய் விவாதங்கள் பற்றி எரிந்த நிலையில், நடிகர் விஜய் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
undefined
அதாவது விஜய் வாக்களிக்க வந்த நீலாங்கரை வாக்குச்சாவடியில் முறையான பார்க்கிங் வசதி இல்லை. அப்பகுதி மிகவும் குறுகலானது என்பதை கவனத்தில் கொண்டே தளபதி விஜய் காரில் வருவதை தவிர்த்ததாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
undefined
பார்க்கிங் பிரச்சனைக்காக மட்டுமே விஜய் சைக்கிளில் வந்ததாகவும், இதில் எவ்வித அரசியல் காரணங்களும் இல்லை என்றும் அவருடைய மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார்.
undefined
click me!