தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் அனைத்து நடிகர்களுமே, நிலையான இடத்தை பிடித்து விடுவது இல்லை. அந்த வகையில், ஆரம்பத்தில் பல போராட்டங்களை கடந்து, தோல்விகளையும், வலிகளையும் கடந்து இன்று தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தையும், ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி உள்ளவர் இளம் நடிகர் அசோக் செல்வன். இவருக்கும், பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனுக்கும் செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
அசோக் செல்வன் நடிகர் விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் வெளியான 'சூது கவ்வும்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். இதை தொடர்ந்து 'பீட்சா 2 வில்லா', தெகிடி, சவாலே சமாளி, 144, மன்மத லீலை, ஹாஸ்டல், கூட்டத்தில் ஒருவன், ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், போர் தொழில், போன்ற பல படங்களில் நடித்தார்.
Sathyaraj Mother Death: சத்யராஜின் தாயார் உடலுக்கு அமைச்சர் சேகர் பாபு அஞ்சலி!
குறிப்பாக ஓ மை கடவுளே படத்தின் வெற்றிக்கு பிறகு, திரைக்கதையை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடிக்க துவங்கியுள்ளார். அப்படி இவர் தேர்வு செய்து நடித்த போர் தொழில் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இதைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் பா ரஞ்சித் தயாரிக்கும் ப்ளூ ஸ்டார் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சபா நாயகன் என்கிற படமும் இவரின் கைவசம் உள்ளது.
ஆனால் இந்த திருமணம் காதல் திருமணமா? அல்லது பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணமா என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. விரைவில் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இவர்களின் திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், திருமணத்திற்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்டுகிறது.