Katrina Kaif- Vicky Kaushal Wedding: சிவப்பு நிற லெஹங்காவில் காதலனை கரம் பிடித்த கத்ரீனா! திருமண புகைப்படங்கள்

Published : Dec 10, 2021, 10:54 AM IST

பிரபல நடிகை, கத்ரீனா கைஃப் (Katrina Kaif) மற்றும் விக்கி கௌஷலின் திருமணம் (Vicky kaushal marriage) நேற்று (டிசம்பர் 9) வியாழன் அன்று, சவாய் மாதோபூரில் உள்ள சிக்ஸ் சென்ஸ் கோட்டையில், பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் தற்போது இவர்களுடைய திருமண புகைப்படங்கள் சில வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, ரசிகர்களின் வாழ்த்துக்களையும் குவித்து வருகிறது.  

PREV
15
Katrina Kaif- Vicky Kaushal Wedding: சிவப்பு நிற லெஹங்காவில் காதலனை கரம் பிடித்த கத்ரீனா! திருமண புகைப்படங்கள்

பாலிவுட் திரையுலகில் நட்சத்திர காதலர்களான கத்ரீனா மற்றும் விக்கி கௌஷல் திருமணம் நேற்று அக்னி சாட்சியாக, மிக பிரமாண்டமாக நடந்த நிலையில், இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகுமா? என காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நேற்று இரவு வெளியாகின.

 

25

இந்த திருமண புகைப்படத்தில் விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா இருவருமே.. திருமணம் ஆன மகிழ்ச்சியில் இருப்பதை பார்க்க முடிகிறது.

 

35

இளஞ்சிவப்பு நிற ஷெர்வானி அணிந்திருக்கிறார் விக்கி கௌஷல். அதே இளம் சிவப்பு நிறம் லெஹங்காவில் ஜொலிஜொலிக்கும் தேவதையாக கத்ரீனா காணப்படுகிறார்.

 

45

பாரம்பரிய முறையில்... விக்கி கௌஷாலின் வீட்டு முறைப்படி இந்த திருமணம் நடந்துள்ளது. இவர்களது திருமணத்தில், 120 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் குறிப்பிட்ட சில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

55

தற்போது இந்த இளம் தம்பதிகளின் திருமண புகைப்படங்கள், சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு, இருவருக்கும் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

click me!

Recommended Stories