2021 Most Tweeted Movies: தலைவரை ஓரம் கட்டிய அஜித், விஜய், சூர்யா! இந்த ஆண்டில் ரசிகர்கள் செய்த தரமான சம்பவம்!

Published : Dec 09, 2021, 07:33 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வேற லெவலுக்கு வரவேற்பு இருந்தாலும், தற்போது அஜித் (Ajith), விஜய் (Vijay), மற்றும் சூர்யா (Suriya) படங்கள் பற்றிய ஹேஷ்டேக் தான் ட்விட்டரில் அதிகம் பயம் படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

PREV
15
2021 Most Tweeted Movies: தலைவரை ஓரம் கட்டிய அஜித், விஜய், சூர்யா! இந்த ஆண்டில் ரசிகர்கள் செய்த தரமான சம்பவம்!

மாஸ்டர்:

கொரோனா பிரச்சனை சற்று குறைந்தபின்னர் மாஸ் ஓப்பனிங் படமாக வெளியானது தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் தான். 50 சதவீத பார்வையாளர்களுக்கு மத்தியில் வெளியானாலும், விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இதுவரை பார்க்காத தலைபதியையும் பார்க்க முடிந்தது. 2021 ஆம் ஆண்டில் #Master என்கிற இந்த படத்தின் ஹேஷ்டேக் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

25

ஜெய் பீம்:

இதை தொடர்ந்து, சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி, பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையேயும் சத்தமில்லாமல் சில சாதனைகளை படைத்தது வரும் 'ஜெய் பீம்' படத்தின் #JaiBhim என்கிற ஹேஷ்டேக் சூர்யா ரசிகர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை 'ஜெய்பீம்' படத்தின் சர்ச்சை முடிவுக்கு வராத நிலையில், ஒரு தரப்பினர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

35

வலிமை:

அதே போல் அஜித் நடிப்பில் வரும் பொங்கல் தின ஸ்பெசலாக வெளியாக உள்ள வலிமை படத்தின் #valimi என்கிற ஹேஷ்டேக்-கை ட்விட்டரில் தாறுமாறாக தெறிக்கவிட்டு வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

 

45

பீஸ்ட்:

ஏற்கனவே மாஸ்டர் படத்தின் ஹேஷ்டேக் அதிகம் ட்விட்டரில் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் #Beast படத்தின் ஹேஷ்டேக் அதிகம் பயன்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

55

ஆனால் தலைவரின் 'அண்ணாத்த' படம் தீபாவளிக்கு வெளியாகி வசூலில் கெத்து காட்டியதாக கூறப்பட்டாலும், இப்படத்தின் ஹேஷ்டேக் அதிகம் பயன்படுத்த பட்ட பட்டியலில் இடம்பெறாதது தலைவர் ரசிகர்களுக்கு சற்று வருத்தம் என்றே கூறலாம்.

 

click me!

Recommended Stories