நடிகர் பிரசன்னா ஹீரோவாக அறிமுகமான கனிகா, '5 ஸ்டார்' படத்தின் மூலம் நடிகையாக தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கியவர் கனிகா. இந்த படத்தை தொடர்ந்து, எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர்.
தமிழ் படங்களை தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தும் இவரால் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை. ஆனால் மலையாள மொழி படங்கள் இவருக்கு கை கொடுத்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
பின் கடந்த 2008-ஆம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்தார்.
இத்தம்பதியருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பின், நடிகர் விக்ரம் நடித்து வரும் 'கோப்ரா', மற்றும் 'யாதும் ஒரே யாவரும் கேளீர்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான 'மா' குறும்படத் சமூக வலைத்தளத்தில் நல்ல விமரசங்களையும் பாராட்டுக்களையும் பெற்றது.
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் கனிகா தற்போது பிகினி உடையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார் .
39 வயதிலும் யங் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தையே அதிர வைத்துள்ளது.
இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியவில்லையா? என சிலர் விமர்சனம் செய்து வந்தாலும், மற்றொரு தரப்பினர் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.