Kajal Agarwal son Birthday: மகன் விருப்பப்படி வித்தியாசமாக பிறந்தநாள் கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால்!

Published : Apr 21, 2025, 06:27 PM ISTUpdated : Apr 21, 2025, 07:08 PM IST

பிரபல நடிகை காஜல் அகர்வால் தனது அன்பு மகன் நீலின் பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாடியுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.   

PREV
110
Kajal Agarwal son Birthday: மகன் விருப்பப்படி வித்தியாசமாக பிறந்தநாள் கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால்!

காஜல் அகர்வால் மகன் பிறந்தநாள்:

பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என தொடர்ந்து 20 வருடங்களாக நடித்து வரும் காஜல் அகர்வால், தன்னுடைய மகன் நீலுவின் 3-ஆவது பிறந்தநாளை வித்தியாசமான தீமுடன் பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

210
Construction works

கட்டுமான பொருள் அலங்கரிப்பு:

காஜல் அகர்வாலின் மகன் நீலுக்கு கட்டடங்கள் கட்டுவது மிகவும் பிடித்தமான ஒன்று. எனவே தன்னுடைய மகனின், விருப்பப்படி, முழுவதுமாக கட்டுமானக் பொருட்கள் அலங்கரிபோது இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்துள்ளது. 

310
Neil birthday photos

காஜல் பகிர்ந்து புகைப்படங்கள்:

காஜல் தனது சமூக ஊடகங்களில் இந்தபுகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில், மகனின் பிறந்தநாளை எவ்வாறு ஏற்பாடு செய்திருந்தார், யார் யார் கலந்து கொண்டனர் என்பதைக் காணலாம்.

410
Kajal Wishing Note

மகனின் பிறந்தநாள் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள காஜல், அதனுடன், சிற்றுண்டி பேச்சுவார்த்தைகளின் தலைமை நிர்வாக அதிகாரி, தூக்க நேரத்தை தாமதப்படுத்தும் வித்தகர், பிராக்கோலியை வேண்டாம் என்று சொல்லி மண்ணை வாவ் என்று சொல்லும் ஒரே நபருக்கு 3வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

510
Kajal Wishes

ஒளிரச் செய்கிறாய்:

மேலும் நீ எங்கள் கண்ணின் மணி, எங்கள் சிறிய சூறாவளி, எங்கள் சிரிப்பு, எங்கள் காபியில் இருக்கும் எனர்ஜி! நீ எங்கள் உலகத்தை மிகவும் மகிழ்ச்சியானதாக மாற்றி, இதயத்தை உருக்கும் விதத்தில் ஒளிரச் செய்கிறாய். என கூறியுள்ளார்.

610
Neil Dream Day

கனவு நாளாக மாற்றி விட்டனர்:

இந்த அலங்கரிப்பில் கட்டுமான டிரக்குகள், கேக், ஐஸ்கிரீம், மிட்டாய், கேக் பாப்கள், கப்கேக்குகள், விளையாட்டுகள், பொம்மலாட்டம், குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து நீலின் பிறந்தநாளை அவனது கனவு நாளாக மாற்றியுள்ளனர்.

710
Neil Always Like Birthday

அம்மா, எனக்கு என் பிறந்தநாள் ரொம்பப் பிடிக்கும்

அனைத்து அன்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி - இதுவரை இல்லாத சிறந்த பிறந்தநாள் இது! "அம்மா, எனக்கு என் பிறந்தநாள் ரொம்பப் பிடிக்கும்!" என்று நீல் சொல்லிக் கொண்டே இருந்தான். என்பதையும் காஜல் தெரிவித்துள்ளார்.

810
Neil 3rd Birthday

3வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்:

காஜல் அகர்வால் 2020 ஆம் ஆண்டு தொழிலதிபர் கௌதம் கிச்லுவை மணந்தார். இந்த ஜோடிக்கு 2023 இல் நீல் பிறந்தார். இப்போது நீல் தனது 3வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

910
Kajal Agarwal Debut Movie

2004 ஆம் ஆண்டு அறிமுகமானார்:

காஜல் அகர்வாலைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், 2004 ஆம் ஆண்டு க்யோ ஹோ கயா நா திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அன்று முதல் இன்று வரை தொடர்ந்து நடித்து வருகிறார்.

1010
Kajal Upcoming Movies

5 திரைப்படங்கள் கைவசம் உள்ளன:

ஏற்கனவே காஜல் அகர்வால் நடித்த சிகந்தர் திரைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் 5 திரைப்படங்கள் நடிகையின் கைவசம் உள்ளன. கண்ணப்பா, தி இந்தியா ஸ்டோரி, இந்தியன் 3, உமா, பாரிஸ் பாரிஸ் ஆகிய படங்களில் நடிகை நடிக்க உள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories