காளிகாம்பாள் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த நடிகை ஹன்சிகா..! மனம் உருகி வேண்டி கொண்ட புகைப்படங்கள்!

First Published | Feb 2, 2023, 10:34 PM IST

நடிகை ஹன்சிகா, இன்று தன்னுடைய படப்பிடிப்பை முடிந்த பின்னர் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா, சமந்தா, காஜல் அகர்வால் பாணியில்... திருமணத்திற்கு பின்னரும் திரைப்படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, ஓரிரு தினங்களுக்கு முன்னர், திருமணத்திற்கு பின் முதல் முறையாக சென்னை வந்தார்.

அவருக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உச்சாக வரவேற்பு கொடுத்த நிலையில், திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், இந்த வருடம் தனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 7 படங்களில் நடிப்பதாக கூறினார்.

பார்பி பொம்மை மாடர்ன் கவுனில்... குனிந்து - நிமிந்து மஜாவாக போஸ் கொடுத்த ஹன்சிகா! மயங்கிய ரசிகர்கள்!

Tap to resize

மேலும் இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் 'காந்தாரி' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்னை  வந்துள்ளதாகவும், ஒரு மாத காலம் சென்னையில் தான் இருப்பேன் என்றும்,  இங்கு வந்ததை தாய் வீட்டிற்கு வந்தது போல் உணர்கிறேன் கூறினார்.

இந்நிலையில் இன்று படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர், இயக்குனர் கண்ணனுடன் ஹன்சிகா சென்னையில் உள்ள பிரசித்திபெற்ற, காளிகாம்பாள் கோவிலுக்கு வந்து மனம் உருக வேண்டிக்கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி 67 படத்தின் டைட்டில் எப்போது? படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்!

Latest Videos

click me!