சகுந்தலம் படத்திற்காக 30 கிலோ புடவை... 3 கோடி நகைகளை அணிந்து நடித்தாரா சமந்தா? ஆச்சர்ய புகைப்படம்!

Published : Feb 02, 2023, 04:55 PM IST

நடிகை சமந்தா, 'சகுந்தலம்' படத்திற்காக சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் 30 கிலோ எடை கொண்ட ஆடை அணிந்து நடித்ததாக வெளியாகியுள்ள தகவல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

PREV
15
சகுந்தலம் படத்திற்காக 30 கிலோ புடவை... 3 கோடி நகைகளை அணிந்து நடித்தாரா சமந்தா? ஆச்சர்ய புகைப்படம்!

சமந்தா நடிப்பில் பிப்ரவரி 17 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் 'சகுந்தலம்'. புராண கதையில் நடித்துள்ள சமந்தாவின் நடிப்பை பார்க்க ரசிகிர் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், இப்படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

25

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும், சமந்தா ரூத் பிரபு நடிப்பில் கடந்த ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடித்திருந்த 'காத்து வாக்குல ரெண்டு காதல்' மற்றும் மெடிக்கல் கிரைமை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, 'யசோதா' ஆகிய  படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

பாரதி கண்ணம்மா சீரியலை தொடர்ந்து... இந்த விஜய் டிவி தொடரும் முடிவுக்கு வருகிறதா? வெளியான புது அப்டேட்!

35

இந்த இரு படங்களிலுமே தன்னுடைய மாறுபட்ட நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்த சமந்தா, தற்போது புராண கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள, 'சகுந்தலம்' படத்தில், நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியான போது, சமந்தாவின் தோற்றம் மற்றும் நடிப்பு ரசிகர்களை அதிகம் கவர்த்ததோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்தது.

45
Samantha

இந்நிலையில் இந்த படம் குறித்து ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. வசுந்தரா டைமண்ட் நிறுவனம் உருவாக்கிய 3 கோடி மதிப்புள்ள ஆபரணங்களை சமந்தா 'சகுந்தலம்' படத்தில் அணிந்து நடித்திருந்ததாகவும், அதே போல் உயர் ரக கற்கள் பாதிக்கப்பட்ட சுமார் 30 கிலோ புடவை அணிந்து சமந்தா ஒரு வாரம் நடித்ததாக கூறப்படுகிறது.

ஒரே சீசனில் ஓஹோனு வாழ்க்கை..! புகழோடு சென்று கார் வாங்கிய 'குக் வித் கோமாளி' பிரபலம்.! குவியும் வாழ்த்து!

55

இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாத நிலையில், இது குறித்த புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளத்தில், வைரலாகி வருகிறது. இதில் சமந்தா கண்கவர் அழகியை, வைர நகைகள் மற்றும் ஜொலிக்கும் கற்கள் பதித்த சேலையை அணிந்துள்ளார என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories