கல்யாணம் முடிந்த கையோடு கணவருக்கு அல்வா கொடுத்த ஹன்சிகா

Published : Dec 09, 2022, 01:52 PM IST

நடிகை ஹன்சிகா, திருமணம் முடிந்த பின் தன் காதல் கணவர் சோஹைல் கதூரியாவுக்காக ஸ்வீட் ஒன்றை செய்து அசத்தி உள்ளார். 

PREV
14
கல்யாணம் முடிந்த கையோடு கணவருக்கு அல்வா கொடுத்த ஹன்சிகா

நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு, சோஹைல் கதூரியா என்கிற தொழிலதிபருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த முண்டோடா அரண்மனையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்துமுடிந்தது. இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

24

திருமணம் முடிந்த கையோடு மும்பை திரும்பிய நடிகை ஹன்சிகாவிடம் அவரின் ஹனிமூன் பிளான் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் தற்போது கைவசம் உள்ள படங்களில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன்பின்னரே ஹனிமூன் பற்றி யோசிப்போம் என்றும் கூறி இருந்தார். இதன்மூலம் திருமணத்துக்கு பின்பும் நடிப்பேன் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் ஹன்சிகா.

இதையும் படியுங்கள்... நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்.... வடிவேலுவுக்கு கம்பேக் படமாக அமைந்ததா? இல்லை கவுத்திவிட்டதா?- டுவிட்டர் விமர்சனம் இதோ

34

இந்நிலையில், நடிகை ஹன்சிகா, திருமணம் முடிந்த பின் தன் காதல் கணவருக்காக ஸ்வீட் ஒன்றை செய்து அசத்தி உள்ளார். அதன்படி ஹன்சிகா தனது கணவர் சோஹைல் கதூரியாவுக்கு அல்வா செய்துகொடுத்துள்ளாராம். இதுகுறித்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

44

இதைப்பார்த்த நெட்டிசன்கள் கல்யாணம் முடிஞ்ச உடனே கணவருக்கு அல்வாவா என ஹன்சிகாவை ஜாலியாக கிண்டலடித்து வருகின்றனர். நடிகை ஹன்சிகா கைவசம் தமிழில், ரவுடி பேபி, பார்ட்னர், கார்டியன் மற்றும் இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படம் என 4 படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்...  நடிகையின் காலை பிடித்து சூர்யா பட இயக்குனர் செய்த கன்றாவி வேலை... கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

Read more Photos on
click me!

Recommended Stories