ஆரோக்கியம் மற்றும் சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் பெற்ற நடிகை கௌதமி..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!

First Published | Dec 8, 2022, 6:21 PM IST

நடிகை கௌதமிக்கு மலேசியாவின், ஆசிய மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரோக்கியம் மற்றும் சமூக சேவைக்கான டாக்டர் பட்டத்தை பெற்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகவே இவருக்கு, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

தெலுங்கு திரையுலகில் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான, 'காந்திநகர் இரண்டாவது வீதி' என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கௌதமி. இதைத் தொடர்ந்து, கன்னட, மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார் கௌதமி.

குறிப்பாக தமிழில் இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பிரபு இணைந்து நடித்த 'குரு சிஷ்யன்' படத்தில் ஹீரோயினாக நடித்து, தன்னுடைய முதல் படத்திலேயே அழகாலும், திறமையான நடிப்பாலும் தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.

மறைந்த நடிகர் சேதுராமனை உரித்து வைத்திருக்கும் மகன்..! கியூட் தேவதை போல் இருக்கும் மகள்..! வைரலாகும் போட்டோஸ்!

Tap to resize

இவர் நடித்த முதல் படமே... சூப்பர் ஹிட் படம் என்பதால், இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த, நம்ம ஊரு நாயகன், ரத்ததானம், வாய் கொழுப்பு, ராஜா சின்ன ரோஜா, எங்க ஊரு மாப்பிள்ளை, பணக்காரன், போன்ற பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. முன்னணி நடிகையாக இருக்கும் போதே சந்தீப் பாத்தியா என்பவரை 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வெளிநாடு பறந்தார் கௌதமி.
 

இதை தொடர்ந்து, கணவரை திருமணம் செய்த ஒரே ஆண்டில்... விவாகரத்து பெற்ற கௌதமி மகள் சுப்பு சுப்புலக்ஷ்மி கை குழந்தையாக இருக்கும் போது சென்னை வந்தார். குழந்தையை கவனித்து கொண்டே மீண்டும், சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். இடையில் கேன்சரால் பாதிக்கப்பட்ட இவருக்கு நடிகர் கமல் ஆறுதலாக இருந்தார். ஏற்கனவே இவர்கள் ஒன்றாக நடித்த போது இருவருக்கும் இடையே, காதல் கிசுகிசு இருந்த நிலையில், இருவரும் லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறையில் வாழ்த்து வந்தனர்.

ஜாக்கெட் போடாமல் சேலை கட்டி... முந்தானையால் முன்னழகை மறைத்த நடிகை ரீமா கல்லிங்கள்! வித்யாசமான போட்டோ ஷூட்!

பல வருடங்கள் இருவரும், ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில்... திடீர் என தன்னுடைய மகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கமலை விட்டு பிரிவதாக அறிவித்தார் கௌதமி. தற்போது சில திரைப்படங்களிலும், சமூக சேவை போன்றவற்றிலும் கவனம் செலுத்தி வரும் இவருக்கு, டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கௌதமி தெரிவித்துள்ளதாவது, மலேசியாவின் ஆசிய மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரோக்கியம் மற்றும் சமூக சேவைக்கான கெளரவ டாக்டர் பட்டம் பெற்றதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த அங்கீகாரம் எனது பணியைத் தொடரவும், உயர்ந்த இலக்கை அடையவும் ஒரு அற்புதமான உந்துதலாக இருக்கிறது. எனது பயணத்தில் தங்கள் அன்புடனும் ஆதரவுடனும் இணைந்த ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். ஆசியா மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகம் மற்றும் ஆசிய பெருநகரப் பல்கலைக்கழகத்தின் தலைவர், வாரியம் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வியறிவு மற்றும் எதிர்கால வாழ்க்கையை வடிவமைப்பதில் அவர்களின் சிறப்பான பணிக்காக மீண்டும் ஒருமுறை நன்றி என தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!