நடிகை தேவதர்ஷினி, படிப்பில் படு சுட்டி. கல்லூரியில் படிக்கும் போதே சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்தி கொண்ட இவருக்கு, சீரியல்களிலும் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தன.
ஆடிட்டர் ஆக வேண்டும் என்பது இவருடைய கனவாக இருந்த போதும், தொடர்ந்து சீரியல் மற்றும் திரைப்படங்களில் வாய்ப்புகள் தேடி வரவே, கனவை ஓரம் கட்டிவிட்டு முழு நேர நடிகையாக மாறினார்.
இருவருமே திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் சீரியலில் கவனம் செலுத்தி வந்த நிலையில்... சமீப காலமாக வெள்ளித்திரை படங்களில் மட்டுமே நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர், ஒரு சில படங்களில் நடிக்க நியாத்திக்கு வாய்ப்புகள் வந்த நிலையில்... அவர் படித்து கொண்டிருப்பதால், படிப்பை முடித்த பின்னர் அவருக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இருந்தால் கண்டிப்பாக திரையுலகில் என்ட்ரி கொடுப்பார் என்பது போல் அவரின் பெற்றோரான சேத்தன் மற்றும் தேவதர்ஷினி தெரிவித்தனர்.
மேலும் நியாத்தியை ஹீரோயினாக நடிக்க, அவரின் அம்மா தேவதர்ஷினி கதைகளை கேட்டு வருவதாகவும் தரமான கதைக்களம் அமைந்தால் உடனே, நியாத்தி ஹீரோயினாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.