பிரிட்டிஷ் நடிகையான எமி ஜாக்சன் கடந்த 2010-ம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து விக்ரமின் தாண்டவம் படத்தில் நடித்த அவர், விஜய்யுடன் தெறி, ஷங்கர் இயக்கிய ஐ மற்றும் ரஜினிக்கு ஜோடியாக 2.0 என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.