ராஜமாதா போல் கம்பீர லுக்... ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன குஷ்பு மகள் அவந்திகா - வைரலாகும் போட்டோஸ்

First Published | Jun 28, 2023, 3:23 PM IST

நடிகை குஷ்புவின் மகள் அவந்திகா, ராஜமாதா போல் கம்பீர தோற்றத்தில் அமர்ந்தபடி நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் குஷ்பு, இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது. குஷ்பு மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக ரசிகர்கள் இவருக்காக கோவில் கட்டிய சம்பவங்களும் அரங்கேறின. முன்னணி நடிகையாக வலம் வந்த போதே இயக்குனர் சுந்தர் சியை காதலித்து கரம்பிடித்தார் குஷ்பு. இவர்களுக்கு கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து இவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகள் பிறந்தன. அதில் மூத்தவர் பெயர் அவந்திகா, இளைய பெண் பெயர் அனந்திகா. நடிகை குஷ்பு ஹீரோயினாக இருந்தபோது கொழுகொழுவென இருப்பார். அதுவே அவருக்கு பிளஸ் ஆகவும் அமைந்தது. இதையடுத்து திருமணமாகி குழந்தை பெற்ற பின்னர் மிகவும் குண்டான குஷ்பு, உருவகேலியை எதிர்கொண்டார். அவரின் மகள்களும் அவரை விட குண்டாக இருந்தனர்.

இதையும் படியுங்கள்... தங்கலான் படப்பிடிப்பில் மூக்கில் காயத்தோடு விக்ரம்! அடையாளம் தெரியாமல் இப்படி ஆகிட்டாரே.. வைரலாகும் போட்டோஸ்!


avantika sundar

இதையடுத்து தங்களை உருவகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை குஷ்புவும், அவரது மகள்களும் தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடன் எடையை சட்டென குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறினர். உடல் எடையை குறைத்த பின்னர் நடிகை குஷ்புவின் மகள் அவந்திகா விதவிதமாக போட்டோஷூட் நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

avantika sundar

அந்த வகையில் அண்மையில் லண்டனில் கவர்ச்சி உடை அணிந்தபடி அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் படு வைரல் ஆகின. இந்நிலையில், தற்போது அதற்கு உல்டாவாக சேலையில் கம்பீர தோற்றத்துடன் அமர்ந்து போட்டோஷூட் நடத்தி இருக்கிறார் அவந்திகா, அவரின் இந்த போட்டோஷூட் பார்த்த ரசிகர்கள் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போய் விட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... இவங்கெல்லாம் கொஞ்சம் ரக்கர்ட் ஆன ஆளு... டாப் ஹீரோக்களே மிரண்டு போகும் அளவுக்கு வில்லியாக மாஸ் காட்டிய நடிகைகள்

Latest Videos

click me!