சமீப காலமாக சினிமா ஹீரோயின் ஆசை, சின்னத்திரை பிரபலங்களை பாடாய் படுத்தி வருகிறது. ஏற்கனவே நடிகை பிரியா பவானி ஷங்கர், செய்தி வாசிப்பாளராக இருந்து, பின் சீரியல், தொகுப்பாளர், வெள்ளித்திரை நடிகை என அடுத்தடுத்த வளர்ச்சியால் இன்று, இளம் ஹீரோயின்கள் பட்டியலில் இடம்பிடித்து, முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு வரும் நிலையில், இவரை தொடர்ந்து இன்னும் சில நடிகைகளும் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்து வருகிறார்கள்.
படிப்படியாக ஹீரோயின் வாய்ப்பை கைப்பற்றிய இவர், 'குற்றம் குற்றமே' என்கிற படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார். இதை தொடர்ந்து, திவ்யா துரைசாமி 'வாழை' என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் கூட தன்னுடைய இடையழகை... காட்டி தினுசு தினுசாக புகைப்படம் வெளியிட்ட இவர், தற்போது ஓடும் ஆற்றில் முக்காடு கட்டிக்கொண்டு ஒய்யார குளியல் போட்ட போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.