குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும்... நடிகை பானுவின் மகள்..! இவங்களுக்கு இவ்வளவு பெரிய பெண்ணா?

First Published | Aug 27, 2021, 7:43 PM IST

தமிழில், நடிகர் விஷாலுக்கு ஜோடியாக 'தாமிரபரணி' படத்தில் நடித்த நடிகை முக்தா பானுவின் மகள், மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக உள்ளதா தகவலை பானு தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். 
 

ஓட்ட நயனம் என்கிற மலையாள படத்தில் அறிமுகமான பிரபல நடிகை முத்தா பானு பின்னர், தமிழில் விஷாலுக்கு ஜோடியாக தாமிரபரணி படத்தில் நடித்தார்.

மலையாளம் மற்றும் தமிழ் என இருமொழிகளிலும் கவனம் செலுத்தி வந்த இவர் நடிப்பில், ரசிகர் மன்றம், சட்டப்படி குற்றம், பொன்னர் ஷங்கர் என பல படங்கள் அடுத்தடுத்து வெளியாகியது.

Tap to resize

திரைப்பட வாய்ப்புகள் குறைய துவங்கவே, திடீர் என தன்னுடைய பெற்றோர் பார்த்து வைத்த தொழிலதிபர் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

இந்த தம்பதிகளுக்கு கியாரா என்கிற அழகிய 5 வயது மகளும் உள்ளார். அவ்வப்போது, தன்னுடைய மகளுடன் எடுத்து கொள்ளும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை பானு வெளியிட்டு அந்த நிலையில், தற்போது கியாராவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக உள்ளார்.

இந்நிலையில் மம்முட்டி நடித்த ’மாமாங்கம்’ உள்பட ஒருசில படங்களை இயக்கிய இயக்குனர் எம் பத்மகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’பத்தாம் வளவு’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக கியாரா நடித்து உள்ளார். இந்த தகவலை பானு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஹீரோயின்களில் மகள்கள் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாவதை தொடர்ந்து, தற்போது நடிகை பானுவின் மகளும் நடிக்க உள்ள தகவல் உறுதியாகியுள்ளது.

Latest Videos

click me!