பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வேகத்தில், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரம்யா பாண்டியன் கனவை கலைப்பது போல், கொரோனாவின் இரண்டாவது அலை உருவெடுத்தது.
முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும், நடிகர் சூர்யா தயாரிப்பில் நடிக்க கமிட் ஆன படம், படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என சமீபத்தில் தகவல் வெளியானது. தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
எப்படியும் முன்னணி இடத்திற்கு வந்தே தீரவேண்டும் என, முனைப்புடன் செயல்படும் ரம்யா பாண்டியன் விடாமுயற்சியோடு விதவிதமான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் .
அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற உடையில்... மென்மையான அழகை வெளிப்படுத்தும் விதமாக இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்து, நெட்டிசன்கள் தங்களது லைக்குகளை குவித்து வருகிறார்கள். இளம் நெஞ்சங்களை இளக வைக்கும் விதமாக உள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.