Actress Ashna Zaveri Beautiful Photos : நடிகை ஆஷ்னா சவேரி மீண்டும் தமிழ் படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
கோலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் பல நடிகைகள்... ஓரிரு படங்களிலேயே சொந்த ஊருக்கு மூட்டையை கட்டும் நிலையில், 10 வருடங்களுக்கு மேலாக, தொடர்ந்து தனக்கு பொருந்தக்கூடிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் தான், மும்பையை சேர்ந்த நடிகை ஆஷ்னா சவேரி.
27
ஆஷ்னா சவேரி அழகான புகைப்படங்கள்
2014-ஆம் ஆண்டு நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும், வெற்றி படமாக அமைந்தது.
37
ஆஷ்னா சவேரி அழகான புகைப்படங்கள்
ஆஷ்னா சவேரி தன்னுடைய அறிமுகப்படத்திலேயே, மென்மையான அழகால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்தை தொடர்ந்து, இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண் பானையும், பிரம்மா.காம், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, போன்ற படங்களில் நடித்தார்.
47
ஆஷ்னா சவேரி அழகான புகைப்படங்கள்
கடைசியாக தமிழில் இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான 'கன்னித்தீவு' என்கிற த்ரில்லர் படத்தில் நடித்திருந்தார். அதே போல் ஹன்சிகா மற்றும் முகேன் ராவ் நடிப்பில், ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான 'MY 3' என்கிற வெப் தொடரிலும் நடித்திருந்தார்.
பல கதைகள் தன்னை தேடி வந்தபோதும், தன்னுடைய நடிப்பு திறமையை வெளியே கொண்டுவரக்கூடிய கதைக்காகவும், அழுத்தமான கதாபாத்திரத்திற்காகவும் காத்திருந்தார்.
67
ஆஷ்னா சவேரி அழகான புகைப்படங்கள்
ஆஷ்னா எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போலவே தமிழில் தற்போது இவர் நடித்து வரும் 'திரைவி' திரைப்படம் அமைந்துள்ளது. இதுவரை தமிழில் எடுக்கப்படாத, வித்தியாயாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், ஆஷ்னாவும் மிகவும் சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
'திரைவி' திரைப்படத்தில் ஆஷ்னா சவேரி ஒருபக்கம் பிசியாக நடித்து வரும் நிலையில், இவர் பச்சை நிற லெஹங்கா அணிந்தபடி மாடர்ன் லுக்கில் மனதை மயக்கும் விதத்தில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ சூட் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.