ஆந்திராவில் இருந்து வந்து, தமிழ் ரசிகர்களை தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் கவர்ந்தவர் தான் நடிகை அஞ்சலி. குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், இறைவி, போன்ற படங்கள், இவரின் நடிப்பு திறமைக்கு மகுடம் சூடிய படங்களாகவே உள்ளது.
அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வந்த அஞ்சலி, சில காதல் சர்ச்சைகள் மற்றும் ரிலேஷன் ஷிப்பில் இருந்ததால், தேடி வந்த வாய்ப்புக்ளை இழந்தார். இதுகுறித்து முதல் முறையாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றிலும் தெரிவித்திருந்த அஞ்சலி, தனக்கான ரிலேஷன் ஷிப், கேரியரை பாதித்ததால் அதில் இருந்து வெளியே வந்து விட்டதாகவ தெரிவித்தார்.
இந்நிலையில் அஞ்சலிக்கு திருமணம் செய்து வைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், அஞ்சலியும் திருமணத்திற்கு ஓகே சொல்லி விட்டதாகவும், விரைவில் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர் ரசிகர்கள். இது ஒருபுறம் இருக்க நடிகை அஞ்சலி கல்யாண கலையுடன்... அழகிய பட்டுப்புடவை அணிந்து.... நகைகளுடன் கையில் மருதாணியோடு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.