இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான 'அங்காடி தெரு' படத்தின் மூலம் கனியாக நடித்து ரசிகர்கள் மனதை இனிக்க செய்தார். இதை தொடர்ந்து இவர் தரமான கதைகளை தேர்வு செய்து நடித்த 'எங்கேயும் எப்போதும்', 'இறைவி', 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்', 'கலகலப்பு', 'வத்திக்குச்சி' போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.